மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்று மகிழ்ச்சி பொங்கும் நன்னாளாக அமையும். மனதில் நீண்டநாள் கனவாக இருந்த ஆசைகளை வெளிப்படுத்துவீர்கள். காதல் வாழ்வு இனிமை பெறும். பிரிந்த தம்பதிகள் இடையே ஒற்றுமை ஓங்கும். இல்லத்தில் மங்கல நிகழ்வுகளுக்கான ஆரம்பங்கள் தோன்றும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் சுமுகமான முன்னேற்றம் காணப்படும். இரவுநேர ஓய்வு இனிமையாக இருக்கும். ஒட்டுமொத்தத்தில், இது ஓர் இனிமையான தினமாக அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசியினரே, இன்று சற்று நிதானமும் அமைதியும் தேவை. போட்டி மனப்பான்மை மற்றும் பொறாமையைத் தவிர்த்து, விட்டுக்கொடுத்து நடப்பது சிறந்தது. பேராசையை தவிர்த்து, குறுக்கு வழிகளில் விரைவாகப் பணக்காரராகும் எண்ணங்களைத் துறக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். நேர்மையுடன் செயல்பட்டால் இந்நாள் சிறப்பான பலன்களை அளிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக அமையலாம். உங்களுக்கு ஏற்படும் நல்ல பலன்களை யாரிடமும் வெளிப்படையாகப் பகிர வேண்டாம். நண்பர்கள் மற்றும் எதிரிகளைப் பிரித்தறிந்து கவனத்துடன் பழகவும். எந்தக் காரணத்திற்காகவும் பகைவர்களை நம்ப வேண்டாம். மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இந்நாள் நன்மைகளை வழங்கும்.
கடகம்
கடக ராசியினருக்கு இன்று நற்பலன்கள் நிறைந்த நாளாக அமையும். உங்கள் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். நிதி நிலைமை சீராகி, சேமிப்பு பெருகும். இல்லத்திற்குத் தேவையான ஆபரணங்கள் மற்றும் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் பொறுப்புகள் சற்று அதிகரிக்கக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இன்று முன்னேற்றகரமான நாளாகும். உங்கள் கடமைகளை செவ்வனே செய்து முடிப்பீர்கள். உறவுகளுக்குள் நிலவி வந்த மனக்கசப்புகள் அகலும். இரக்க குணம் மேலோங்கும். நீண்டதூரப் பயணங்களால் உடல் அசதி ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்தத்தில் இந்நாள் சிறப்பானதாக அமையும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இன்று வருவாய் பெருகும் நாளாகும். நீண்டகாலமாக வசூலாகாத கடன்கள் வசூலாகும். நிதி நிலைமை சீராகும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். கணவன் மனைவி உறவில் நிலவி வந்த மனக்கசப்புகள் விலகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய இது உகந்த நேரம்; நற்பலன்கள் உண்டாகும்.
துலாம்
துலாம் ராசியினரே, இன்று நிதி சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முடிந்தவரை அநாவசியப் பொருட்களை இன்று வாங்க வேண்டாம். அவசியமான செலவுகள் எனினும், ஒன்றுக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் நிதானம் அவசியம். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் மேலோங்கும். துணிச்சலுடன் பல நற்செயல்களை மேற்கொள்வீர்கள். உங்களது புதிய முடிவுகள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும். பிறருக்கு உதவும் மனப்பக்குவம் அதிகரிக்கும். மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேசுவீர்கள். இதனால் மனச் சுமை குறையும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இன்று பல நற்பலன்கள் நிகழப்போகின்றன. உங்களை எதிர்த்தவர்கள் கூட உங்களிடம் பணிவுடன் நடந்துகொள்வார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஏற்பட்ட சிறு சிறு மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகளுக்கு இன்று கூடுதல் ஆதாயம் கிட்டும்.
மகரம்
மகர ராசியினருக்கு இன்று சிந்தனை மேலோங்கும் நாளாகும். அதிகப்படியான சிந்தனைகள் உங்கள் கடமைகளில் இருந்து விலகிச் செல்ல வழிவகுக்கலாம்; கவனம் தேவை. அநாவசியமான எண்ணங்களைத் தவிர்த்து, தேவையான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்திச் செயல்படவும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் சிறந்த சுறுசுறுப்பு காணப்படும். தீராத துயரங்கள் விலகும். தேவைக்கேற்ப தனவரவு உண்டாகும். நீண்டதூரப் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சிலர் உறவுகளிலிருந்து சிறிது காலம் பிரிந்து வாழும் சூழல் ஏற்படலாம். காலம் அதனைச் சீர் செய்யும்.
மீனம்
மீன ராசியினருக்கு இன்று அன்பு, பாசம், காதல் மேலோங்கும் நாளாகும். வாழ்க்கைத்துணை மீது அக்கறை அதிகரிக்கும். இல்லத்தில் நீண்டநாட்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பணிகளை அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். புதிய பொறுப்புகள் உங்களை வந்தடையும். அப்பொறுப்புகளை நிறைவேற்றுவதால் மனநிறைவு உண்டாகும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil
எழுதியவர்: Ganesh Gandhi
எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்:


