மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடும் யோகமான நாள். புதிய முயற்சிகள் சிறப்பான வெற்றிகளை ஈட்டித்தரும். நிதி நிலை வலுப்பெற்று, கடன் சுமை கணிசமாகக் குறையும். வாகனப் பயணங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். நேர்மை நெறியைப் பின்பற்ற, மேன்மேலும் நற்பலன்கள் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பெயரும் புகழும் உயர்ந்து, சமூகத்தில் நற்பெயர் நிலைக்கும். நெடுங்காலமாகத் தொடர்ந்த சிக்கல்கள் யாவும் எளிதில் நீங்கும். பெண்களுக்கு இறை வழிபாடு மன அமைதியை நல்கும்; சுப பலன்கள் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகும் சுப தினமாக அமையும். நாள்பட்ட வராக்கடன்கள் வசூலாகும். வீட்டிற்குத் தேவையான பொன்னும் பொருளும் சேரும். பணியிலும் வியாபாரத்திலும் அபார சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியக் குறைபாடுகள் அகன்று, தேவையற்ற விரயச் செலவுகள் கட்டுக்குள் வரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமும் வளமும் நிறைந்த நன்நாளாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, புதுத் தெம்புடன் செயல்படுவீர்கள். தாமதித்திருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்காது, பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் பெருகும் சிறப்பான நாள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள உகந்த நேரம். தேவை அறிந்து செலவிட்டு, ஆடம்பரத்தைத் தவிர்க்க, எதிர்காலம் ஒளிமயமாய் அமையும். குறிப்பாக மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மிகவும் சாதகமான நாள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று மகிழ்ச்சி இரட்டிப்பாகும் மங்கல நாள். நெடுங்காலமாகப் பிரிந்திருந்த உறவுகள் மீண்டும் இணைந்து, மனமகிழ்வு உண்டாகும். கடன் சுமை நீங்கி, நிம்மதி பிறக்கும். சிலருக்கு வெளியூர் பயண வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியக் குறைபாடுகள் அகன்று, தேவையற்ற விரயங்கள் கட்டுக்குள் வரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று ஆதாயம் இல்லாத செயல்களில் ஈடுபடாத, விவேகமான நாள். லாப நஷ்டக் கணக்கறிந்து செயல்படுவீர்கள். நாள்பட்ட சிக்கல்கள் தீரும். பண வரவு சீராகி, கடன் சுமை குறையும். பணி மற்றும் வியாபாரத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கதவைத்தட்டும் அருமையான நாள். இல்லத்திலுள்ள பெண்களுக்குப் பொன் பொருள் சேர்க்கை உண்டு. எதிர்பாராத பரிசுகள் மனமகிழ்வை இரட்டிப்பாக்கும். தடைப்பட்ட சுப காரியங்கள் மீண்டும் துவங்கப் பெறும். காதல் கைகூடி, மங்களகரமான செலவுகள் உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நற்பலன்கள் உண்டாகும் சிறப்பு மிக்க நாள். வீண் பழிகள் நீங்கி, மனச் சுமை அகலும். சோம்பல் மறைந்து, சுறுசுறுப்பு மேலோங்கும். பகைவர்களின் தொல்லைகள் அற்றுப்போம். மனம் ஆன்மீக நாட்டத்துடன் செயல்படும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோகமான வாழ்வு அமையும் சுப நாள். சரியான நேரத்தில் உணவு, ஆழ்ந்த உறக்கம் என நாள் இனிதே கழியும். கட்டுமானத் தொழில் சிறப்பான லாபம் ஈட்டித்தரும். விவசாயிகளுக்குத் தொழில் சார்ந்த சிக்கல்கள் நீங்கும். வேலை தேடுவோருக்கு நற்செய்திகள் வந்து சேரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி பெருகும் மகத்தான நாள். மனக் குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். பிள்ளைகளால் மனமகிழ்வு உண்டாகி, சுபச் செலவுகள் ஏற்படும். பணி மற்றும் வியாபாரத்தில் நிலவிய மன உளைச்சல்கள் குறையும். பயணங்களால் நற்பலன்கள் கிட்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தலைநிமிர்ந்து நிற்கும் பெருமைக்குரிய நாள். இதுவரைக் கண்ட இன்னல்களுக்கு நற்பலன் உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவால் மேன்மை கிட்டும். நெடுந்தூரப் பயணங்களால் சிறு சோர்வு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் மட்டும் தனிக்கவனம் தேவை.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


