மேஷம்
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சோதனைகளும், சவால்களும் நிறைந்த நாளாக அமையக்கூடும். எக்காரணம் கொண்டும் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். குடும்ப உறவுகளில் வாக்குவாதங்களைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது அவசியம். முன் கோபத்தை அறவே தவிர்த்து, அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்பட்டால், நாள் இனியதாக அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இன்று உற்சாகமும், மன நிறைவும் தரும் நாளாக அமைகிறது. இல்லத்தரசிகளுக்கு ஆன்மீகச் சிந்தனைகள் மேலோங்கும். ஆரோக்கியமான உணவு, ஆழ்ந்த உறக்கம் என உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இந்நாளின் நல்ல நிகழ்வுகளுக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனத்தெளிவின்மையும், பதட்டமும் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். பணியில் முழு ஈடுபாடு காட்ட முடியாமல் போகலாம். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். இருப்பினும், கடமைகளை தவறவிடாமல், மனதை ஒருநிலைப்படுத்தி விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
கடகம்
கடக ராசி அன்பர்கள் இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். அவசரம் தவிர்த்து, எந்த ஒரு முடிவையும் நிதானமாக எடுங்கள். முன் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். தேவையற்ற சிந்தனைகளுக்கு மனதிலிருந்து இடம் கொடுக்க வேண்டாம். பணி மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. இறை வழிபாடு மன அமைதியைத் தரும். நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அனைத்தும் சுபமாக அமையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சிறுசிறு தடங்கல்கள் மற்றும் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது. நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். முக்கியப் பணிகளை நாளைக்கு ஒத்தி வையுங்கள். அன்றாடப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். முன் கோபத்தைத் தவிர்த்து, நிதானத்துடன் செயல்பட்டால் நன்மைகள் கூடும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இன்று செலவுகள் அதிகரிக்கும் நாளாகும். பண விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதை இன்று தவிர்ப்பது நல்லது. இல்லத்தரசிகள் உறவினர்களுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். முன் கோபத்தை தவிர்ப்பது அவசியம். மாணவர்களுக்கு கல்வியில் பொறுமை காப்பது நற்பலன் தரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மன உறுதியுடன் செயல்பட்டு எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நீண்ட நாட்களாக மனதில் இருந்த சுமைகள் குறையும். மனதில் புதைந்திருந்த எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி உறவில் நிலவிய மனக்கசப்புகள் நீங்கி, உறவுகளுக்குள் ஒற்றுமை மேலோங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினரே, இன்று உங்கள் திறமைகள் பிரகாசிக்கும். உங்கள் வசீகரத் தோற்றமும், பேச்சாற்றலும் பிறரை உங்கள் பக்கம் ஈர்க்கும். கலைஞர்களுக்கு இன்று சிறப்பு வாய்ந்த நாளாக அமையும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். நீண்ட தூரப் பயணங்கள் மன மகிழ்ச்சியைத் தரும். சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். நிதி நிலைமை சீராகவும், ஸ்திரமாகவும் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று ஆதாயம் இல்லாத எந்த செயலிலும் ஈடுபட மாட்டீர்கள். லாப நஷ்டக் கணக்கைப் புரிந்தே செயல்படுவீர்கள். வரவு செலவு கணக்கில் நேர்மையுடன் இருப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணியிடத்தில் புதிய போட்டி மனப்பான்மை உருவாக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
மகரம்
மகர ராசியினருக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக அமைகிறது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணங்களை செயல்படுத்தலாம். எதிர்கால சேமிப்புக்கான திட்டங்களை வகுத்து செயல்படுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தடைபட்டிருந்த சுப காரியங்கள் மீண்டும் நடைபெறும் வாய்ப்புகள் உண்டு.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். பணி மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளுடன் நிலவிய மனக்கசப்புகள் விலகும். கடன் சுமையிலிருந்து விடுதலை பெற்று மனநிம்மதி அடைவீர்கள்.
மீனம்
மீன ராசியினருக்கு இன்று வருமானம் அதிகரிக்கும் நாளாக அமையும். கடன் சுமை குறையும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பரிசுகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்படக்கூடும் என்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil
எழுதியவர்: Ganesh Gandhi
எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்:


