மேஷம்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று சிறுசிறு தடங்கல்களும், சவால்களும் உருவாக வாய்ப்புள்ளது. இத்தகைய தடைகளைக் கடந்து வெற்றி பெற, தளராத முயற்சியும், அஞ்சாத துணிவும் அத்தியாவசியமாகும். முக்கியப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளை இயன்றவரை நாளைய தினத்திற்கு ஒத்திவைப்பது நலம் பயக்கும். குடும்ப உறவுகளில் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் நல்லிணக்கம் நிலைக்கும். சுபமே விளையும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இன்று உள்ளம் நிறை மகிழ்ச்சி பொங்கும். இல்லத்தில் விருந்தினர்களின் வருகை மனமகிழ்ச்சியைத் தரும். சுபச் செலவுகள் உண்டாகும். நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த உறவுகளுடன் மீண்டும் இணையும் சந்தர்ப்பங்கள் அமையும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். மனதிற்கிசைந்த பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முழுமையான திருப்தி நிலவும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவும் வெற்றி வாகை சூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பன்மடங்கு சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். விடுமுறை நாளாக இருப்பினும், இன்றைய தினம் உங்களுக்குப் பயனுள்ள நாளாக அமையும். இல்லத்தில் நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நன்மைகளே நடைபெறும்.
கடகம்
கடக ராசியினருக்கு இன்று மனதில் பல்வேறு உயரிய சிந்தனைகள் உதிக்கும். எனினும், நீங்கள் எண்ணியவற்றையும் கடந்து, பற்பல சுப நிகழ்வுகள் நடைபெறும். மனதிற்கு இன்பம் தரும் அனுபவங்கள் கைகூடும். இந்த அதிர்ஷ்டகரமான தினத்தை நல்கிய இறைசக்திக்கு நன்றி கூறுங்கள். நிகழும் அனைத்தும் நன்மைக்கே என்ற உறுதியுடன் இன்றைய தினத்தை இனிதே நிறைவு செய்வீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வருமானம் சிறக்கும். வராக்கடன்கள் வசூலாகும். தேவையான பண வரவு கையில் தங்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் நிலவிய மனஸ்தாபங்கள் அகன்று, ஒற்றுமை மேலோங்கும். தேவையற்ற சிக்கல்கள் தானாகவே விலகிச் செல்லும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தேவையற்ற குழப்பங்களில் சிக்கும் வாய்ப்புகள் உள்ளன. மூன்றாவது நபர்களை முழுமையாக நம்ப வேண்டாம். உங்களது குடும்ப விஷயங்களை பிறரிடம் அனாவசியமாகப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். ஐயம் தவிர்த்து, இறை வழிபாட்டில் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
துலாம்
துலாம் ராசி அன்பர்கள் இன்று கூடுதல் உழைப்பை முதலீடாகச் செலுத்த வேண்டியிருக்கும். எந்தவொரு முயற்சியும் உடனடியாக வெற்றி அளிக்காது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதற்காகச் சோர்ந்து விடவோ, மனம் தளர விடவோ கூடாது. விடாமுயற்சியுடனும், தைரியத்துடனும் செயல்பட்டால், வெற்றி நிச்சயம் உங்களை வந்தடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி பெறும். காரியத் தடைகள் விலகும். இல்லத்தில் நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த சுப காரியங்கள் மீண்டும் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். கடன் சுமை குறையும். தேவைக்கு ஏற்ற பணவரவு கையில் தங்கும். எதிர்காலச் சேமிப்பிற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நன்மைகளே உண்டாகும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று போட்டி, பொறாமைகள் சற்று அதிகரிக்கும். எதிரிகள் தொல்லைகள் உருவாகலாம். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போதுள்ள பணியைத் தக்கவைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் புதிய முடிவுகள் எடுக்கும்போது கவனமாகச் செயல்பட வேண்டும். பொறாமை காரணமாக சில சிக்கல்கள் ஏற்படலாம், எச்சரிக்கை தேவை.
மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பெருமையுடன் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாளாக அமையும். வாழ்வில் சாத்தியமில்லையென நீங்கள் கருதிய சில விஷயங்களை இன்று சாதிப்பீர்கள். புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். பணவரவு தாராளமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சி இரட்டிப்பாகும். வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட தூரப் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். பிரிந்த உறவுகளுடன் மீண்டும் சேர சந்தர்ப்பங்கள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி நல்ல நிலை ஏற்படும். சுபமே உண்டாகும்.
மீனம்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நன்மைகள் பல நடக்கும். வாழ்க்கைத்துணையுடன் நிலவிய மனக்கசப்புகள் நீங்கி, குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். சில சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட தூரப் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை வழங்கும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


