நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு மனஅமைதி பெருகும். பணி மற்றும் வணிகத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நிதிநிலை சீரமைப்பைக் காணும். தேவைக்கு ஏற்ப தனவரவு ஏற்படும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகி மனநிறைவு கிட்டும். வாகனப் பயணங்களின்போது கூடுதல் கவனம் தேவை. நெடுந்தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கடும் வெயில் நேரத்தில் வெளியேறுவதைத் தள்ளிப்போடுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஒருவித மனக் குழப்பம் ஏற்படக்கூடும். பணி மற்றும் வணிகத்தில் முழுமையான ஒருமைப்பாடு குன்றும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதை ஒத்திவைக்கவும். அனுபவமிக்க பெரியோரின் அறிவுரைகளைக் கேட்பது நல்லது. குறிப்பாக, இளைஞர்கள் அவசர முடிவுகளைத் தவிர்த்து, நிதானத்துடன் சிந்தித்து செயலாற்றுவது நன்மை பயக்கும்.

– Advertisement –

மிதுனம்

இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு ஒருவித மனச் சஞ்சலம் ஏற்படலாம். புதிய முடிவுகளை எடுக்கும்போது ஆழ்ந்த சிந்தனை அவசியம். மேலதிகாரிகளுடன் தேவையற்ற பகைமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம். குடும்பப் பெண்கள் உறவினர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அமைதியுடனும் நிதானத்துடனும் நடந்துகொண்டால் இந்த நாள் இனிமையானதாக அமையும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று தனவரவு பெருகும் யோகம் உண்டு. செலவினங்களைச் சமாளிக்க உதவும் எதிர்பாராத பொருள் வரவு மனதிற்கு நிம்மதி தரும். கடன் சுமை குறையும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். இது தவிர, பணி மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உடல் சோர்வைத் தவிர்க்க போதுமான நீர் அருந்தவும்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமும் சுறுசுறுப்பும் மேலோங்கும். பணி மற்றும் வணிகத்தில் வளர்ச்சி உண்டாகும். தேவைகளுக்குப் போதுமான தனவரவு கிட்டும். கடமைகளில் இருந்து வழுவாமல் செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும். பயணங்கள் வெற்றிகரமாக அமையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கீர்த்தியும் அந்தஸ்தும் உயரப் பெறும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு கூடும். இதுவரையிருந்த அவமானங்கள் அகன்று, நற்பெயர் உண்டாகும். தலைநிமிர்ந்து நிற்கும் சூழல் உருவாகும். இறைவனைப் போற்றுங்கள். பல நாள் மனக் குழப்பங்களும் கவலைகளும் நீங்கி, இந்த நாள் இனிமையானதாக அமையும்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த ஆதரவு கிட்டும். சபையில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு உண்டாகும். குடும்பச் சிக்கல்கள் தீரும். குடும்ப விவகாரங்கள் ஒரு முடிவுக்கு வரும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். பணி மற்றும் வணிகம் சீராக நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகும் நாள். எதிர்பாராத யோக பலன்கள் உங்களைத் தேடி வரும். காதல் கைகூடி, மணவாழ்க்கைக்கு வழிவகுக்கும். பணி மற்றும் வணிகத்தில் எதிர்பார்த்ததற்கும் மேலான முன்னேற்றம் காணலாம். பயணங்கள் நற்பலன்களை அளிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் பொங்கும் நாளாகும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீட்டில் உள்ள முதியோர் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடும் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று துன்பங்கள் விலகி, இன்பங்கள் வந்து சேரும் நாள். பிரிந்திருந்த உறவுகள் மீண்டும் இணையும். கணவன்-மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிட்டும். எதிரி பயம் அகலும். இன்று அனைத்தும் நன்மையாகவே அமையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று போதுமான ஓய்வு கிடைக்கும். பணி மற்றும் வணிகம் ஒருபுறம் இருந்தாலும், வசதி வாய்ப்புகள் தானாக வந்து சேரும். இந்த நன்னாள் தந்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள். ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கும். வீண் விரயச் செலவுகள் கட்டுக்குள் வரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெருமிதம் கொள்ளும் நாளாக அமையும். தலைநிமிர்ந்து, தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தேவையற்ற சிக்கல்கள் உங்களை விட்டு விலகும். வியாபாரம் மற்றும் பணி சீராக நடைபெறும். நிதிநிலை சற்று பின்னடைவைக் காட்டினாலும், விரைவில் சீராகும். கவலை கொள்ளத் தேவையில்லை.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online