மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, இன்றைய நாள் சகல காரியங்களிலும் மேன்மையைத் தரும் பொன்னாளாக அமையும். எடுக்கும் புதிய முயற்சிகள் யாவும் வெற்றி வாகை சூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிட்டும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கி மன நிம்மதி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சங்கடங்கள் அகலும். உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும் நாள் இன்று.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே, இன்றைய தினம் பெரும் எதிர்பார்ப்புகளை தவிர்ப்பது நலம். சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனினும், விடாமுயற்சியைக் கைவிடாது, கடமைகளில் கவனம் செலுத்துங்கள். இறைவழிபாடு உங்களது மனதை அமைதிப்படுத்தும். நற்சிந்தனைகளுடன் செயல்பட்டால் நன்மை உண்டாகும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, இன்றைய நாள் மனமகிழ்ச்சி பெருகும் நாளாகும். நீண்ட நாட்களாக மனதில் தேக்கி வைத்திருந்த ஆசைகள் நிறைவேறும். காதல் கைகூடி, திருமண பந்தம் வரை செல்ல வாய்ப்புண்டு. சுபநிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் இனிதே துவங்கும். பணவரவு சீராக அமைந்து, நிதி நிலைமை வலுப்பெறும். கடன் சுமை குறையும்.
கடகம்
கடக ராசி அன்பர்களே, இன்றைய தினம் மகிழ்ச்சியும் சுறுசுறுப்பும் நிறைந்திருக்கும். சோம்பல் நீங்கி, உத்வேகத்துடன் பணிகளை மேற்கொள்வீர்கள். காலத்தை வீணாக்காமல், கடமைகளைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலமான சூழல் நிலவும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, இன்றைய நாள் உற்சாகம் பொங்கும் நாளாக அமையும். நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருந்த பணிகள் இன்று வெற்றிகரமாக நிறைவுபெறும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் விரைந்து நடைபெற்று சாதகமான பலன்கள் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே, இன்றைய தினம் மனநிறைவும் மன அமைதியும் கிட்டும். நீண்ட நாட்களாக மேற்கொண்ட முயற்சிகள் இன்று வெற்றி அடையும். வியாபார வளர்ச்சிக்காக வங்கிக் கடன் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நண்பர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நல்லுறவு மேம்படும். தேவையற்ற சந்தேகங்கள் அகலும். இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே, இன்றைய தினம் உங்களது பெயரும் புகழும் அந்தஸ்தும் உயரும். சமூகத்தில் பாராட்டுகள் குவியும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய சொத்துகள் வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட சிறப்பான முன்னேற்றம் கிட்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே, இன்றைய நாள் சுபீட்சம் நிறைந்த நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். அவர்களது செயலால் பெற்றோர் மனம் குளிர்ந்து மகிழ்வர். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுமூகமான சூழல் நிலவும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே, இன்றைய தினம் உங்களது பெயரும் புகழும் உயரும். பாராட்டுகள் குவியும். தேவைக்கேற்ப பணவரவு தாராளமாக இருக்கும். வாழ்க்கை துணைக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். நீண்ட தூரப் பயணங்களால் மனநிறைவு உண்டாகும்.
மகரம்
மகர ராசி அன்பர்களே, இன்றைய நாள் முன்னேற்றம் நிறைந்த நாளாகும். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். எதிர்கால சேமிப்பிற்கான அடித்தளத்தை இன்று அமைக்கலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி, நற்பலன்கள் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, இன்றைய தினம் உற்சாகம் பொங்கும் நாளாக அமையும். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரும். உங்களது பேச்சுத்திறமை வெளிப்பட்டு, நான்கு பேர் மத்தியில் உங்களது கருத்துகளுக்குச் செல்வாக்கு கூடும். உங்களுக்கு ஆதரவாகப் பலர் துணை நிற்பார்கள். உறவுகளோடும் நண்பர்களோடும் நல்லிணக்கம் உண்டாகும் நாள் இன்று.
மீனம்
மீன ராசி அன்பர்களே, இன்றைய தினம் பொறுமையுடன் செயல்படுவது மிக அவசியம். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். அதிகம் பேசாமல் இருப்பது நலம். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சிந்தித்துச் செயல்பட வேண்டும். கூடுமானவரை முக்கியமான விஷயங்களை நாளைக்கு ஒத்திப்போடுவது நல்லது. உயர் அதிகாரிகளுடன் தேவையற்ற மனக்கசப்பை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். செலவுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil
எழுதியவர்: Ganesh Gandhi
எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்:


