மேஷம்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று சுபயோகங்கள் நிறைந்த நாளாக அமையும். எதிர்பாராத நன்மைகளும், வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசி, மன அமைதியை நல்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நீண்டகாலக் கனவுகள் நனவாகி, இறை அருளை உணர்வீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத தன வரவு உண்டு. நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் சுமை தீரும். பல நாள் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பீர்கள். மனநிம்மதியுடன் இனிமையான உறக்கத்தைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். காலத்தை வீணடிக்காமல் பயனுறச் செயல்படுங்கள்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று போட்டி, பொறாமைகள் நிறைந்த நாளாக அமையலாம். தேவையற்ற வார்த்தைப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பது நல்லது. வாக்குவாதங்களில் ஈடுபடாமல், விட்டுக்கொடுத்துச் சென்றால் பிரச்சனைகளின் தாக்கத்தைக் குறைக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானம் தேவை. தெய்வ வழிபாடு சிறப்பானது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தொடங்கலாம். வங்கிக் கணக்குகள் துவங்குதல், சேமிப்பை அதிகரித்தல் போன்ற நிதி சார்ந்த முடிவுகளுக்கு உகந்த நாள். பணம் சம்பந்தப்பட்ட சிக்கல்களுக்குப் பேசி நல்லதொரு முடிவெடுப்பீர்கள். நன்மைகளே நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்கள் இன்று முன்னேற்றப் பாதையில் பயணிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற அனைத்து விஷயங்களும் சாதகமாக அமையும். உயர்கல்விக்காக மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தேடித்தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட சிறப்பான லாபம் கிட்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று தங்கள் பேச்சாற்றலால் பல காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உங்கள் வசீகரத் தோற்றமும், வசீகரப் பேச்சும் சாத்தியமற்ற பல விஷயங்களைச் சாத்தியமாக்கும். யோகலட்சுமியின் பரிபூரண அருள் இன்று உங்களுக்குக் கிட்டும். காதல் கைகூடும், திருமணப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவை எட்டும். வீட்டில் சுபச் செலவுகள் உண்டாகும்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களைப் பொறுத்தவரை இன்று நன்மைகள் பல நடக்கும் நாள். புதிய முயற்சிகளைத் துணிவுடன் மேற்கொள்ளலாம். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி உண்டு. உயர்கல்வி தொடர்பான தடைகள் நீங்கி, நல்வழி பிறக்கும். பிள்ளைகளின் மனமகிழ்ச்சியில் பெற்றோர்கள் பங்கேற்று, சந்தோஷம் நிறைந்த நாளாக இன்றைய தினத்தைக் கழிப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று தடைபட்டு வந்த சுபகாரியப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவங்கலாம். இன்றைய நாள் உங்களுக்குச் சுபமான நாளாக அமையும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எண்ணிய வேலை, விரும்பிய ஊதியத்துடன் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களைப் பொறுத்தவரை இன்று பணிகள் சற்று அதிகமாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிட்டும். உங்கள் நேரம் போவதே தெரியாமல் உழைப்பில் மூழ்கிப் போவீர்கள். நல்ல புகழும் பெயரும் கிடைக்கும். உங்களின் கனவுகள் நனவாகும் நாள் இன்று. சொத்து வாங்கும் யோகம் உண்டு. சொத்து தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படும்.
மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பல நல்ல நிகழ்வுகள் நடைபெறும். புதிய நட்புகள் உருவாகி ஆதாயம் கிட்டும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். கடன் சுமை குறையும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்க உண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நன்மையே உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உணவுப் பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடு அவசியம். அதிக வேலைப்பளுவை ஏற்காமல், தேவையான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். நிதானமாகச் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலன்களை அடையலாம். நன்மையே நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று திறம்பட தங்கள் கடமைகளை நிறைவேற்றுவீர்கள். பலரால் செய்ய முடியாத பணிகளைக்கூட, இன்று நீங்கள் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். பெயர், புகழ், பாராட்டு, கௌரவம் உயரும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிட்டும். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கான பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பீர்கள். மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


