கார்த்திகை மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

கார்த்திகை மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். நீண்ட நாட்களாக உங்களுக்கு பிரச்சனை கொடுத்து வந்த எதிரி தொல்லை இனி வரக்கூடிய நாட்களில் இருக்காது. ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். வேலையில் கொஞ்சம் சுமை அதிகமாக தான் இருக்கும். மேலதிகாரிகளை சமாளிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நிறைய லாபத்தை பெறுவீர்கள். பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது. மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் ஆர்வம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு இந்த மாதம் ஆன்மீக ரீதியாக நிறைய சந்தோஷங்கள் கிடைக்கும் மாதமாக இருக்கும். தினம்தோறும் கந்த சஷ்டி கவசம் கேட்பது உங்களுக்கு நன்மையை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். நீங்கள் முயற்சி செய்த வேலை, முயற்சி செய்யாத வேலை என்று எல்லா வேலையும் உங்களுக்கு சாதகமாகத்தான் அமையும். கவலை கொள்ள வேண்டாம். நிதிநிலைமை சீராக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். உடன் வேலை செய்பவர்களால் நல்லது நடக்கும். எதிரி தொல்லை விளக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சோம்பேறித்தனத்தோடு இருந்தால் வியாபாரம் படுத்து விடும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். வீட்டை நிர்வாகிக்கும் பெண்களுக்கு இந்த மாதம் சில உடல் உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை, தினம் தோறும் சிவன் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சுறுசுறுப்பான மாதமாக இருக்கும். எப்படியாவது குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்று போராடுவீர்கள். நிதி நிலைமையை சரி செய்வீர்கள். வாங்கிய கடனை எல்லாம் திருப்பி அடைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மனம் நிம்மதியை கொடுக்கக்கூடிய அத்தனை விஷயங்களையும் தேடித்தேடி செய்வீர்கள். நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அனுசரணை தேவை. முன்கோபத்தை குறைத்து நடந்து கொண்டால், பிரச்சனைகள் பெருசாக வராது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யும்போது கவனம் தேவை. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது பாத்துக்கோங்க. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்ப பிரச்சனைகளை சுலபமாக கையாண்டு சரி செய்வீர்கள். தினம் தோறும் முருகர் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் ஒரு நிமிடம் கூட ஓய்வு கிடைக்காது. அவ்வளவு பிஸியாக வேலை செய்வீர்கள். வேலையிலும் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். கடந்த மாதம் செய்த தவறுகளை இந்த மாதம் திருத்திக் கொள்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இறை வழிபாடு மன நிம்மதியை கொடுக்கும். தேவையான வரங்களையும் கொடுக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். குடும்பத்தில் இருக்கும் பெண்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். மாணவர்கள் படிக்கும் நேரத்தில் மனதை அலைபாய விடக்கூடாது. தேவையற்ற நண்பர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் நிதிநிலைமைக்கு பிரச்சனையே இருக்காது. நீங்கள் எதிர்பார்க்காத வரவு பணப் பெட்டியை நிரப்பும். தேவைக்கு ஏற்ப பணம் இருக்கும். இதுவே பாதி டென்ஷனை குறைத்து விடும். வேலையில் புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். மன உறுதியோடு செயல்படுவீர்கள். யாருக்கும் பயப்பட மாட்டீர்கள். தலை நிமிர்ந்து வாழக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். பாட்னரின் மூலம் நல்லது நடக்கும். பெண்களுக்கு அலுவலக வேலையும் சிறப்பாக இருக்கும். வீட்டு வேலையிலும் பிரச்சனை இல்லை. தினம்தோறும் பைரவர் வழிபாடு கஷ்டங்களை குறைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் முன்னேற்றம் தரக்கூடிய வாய்ப்புகள்‌ வீடு தேடி வரும். வாய்ப்புகளை நழுவ விட வேண்டாம். நாலு பேர் மத்தியில் உங்களுடைய பெயர் உயர்ந்து நிற்க சந்தர்ப்ப சூழ்நிலைகள் கைகொடுக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாமும் பிரபல்யமாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். செய்யும் வேலையில் சுத்தமும், நேர்மையும் கலந்து இருக்கும். இதனால் நல்லது நடக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். யாரையும் நம்ப கூடாது. பெண்களுக்கு இந்த மாதம் நல்லது நடக்கும் மாதமாக இருக்கிறது. தினமும் விநாயகர் வழிபாடு உங்களுடைய பிரச்சனைகளை தீர்க்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்கோபம் கூடாது. பொறுமை தேவை நிதானம் தேவை. உங்களுடைய நிதானத்தை இழந்து விட்டால், இந்த மாதம் உங்களுடைய நிம்மதியும் இழந்து போகும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லா விஷயத்திலும் அனுபவசாலிகள் பேச்சை கேட்டு நடக்கவும். வேலை சுமை அதிகமாக இருக்கும். பிரஷர் இருக்கும். டார்கெட்டை முடிக்க முடியாத சூழ்நிலை சில பேருக்கு இருக்கும். வேலை பறிபோவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் தடைகள் வரும். சின்ன சின்ன நஷ்டம் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கையில் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது. குலதெய்வத்தின் பாதத்தை இறுக்கமாக பற்றிக்கொள்ளுங்கள். தினமும் இஷ்ட தெய்வ வழிபாடு செய்வது நல்லது. தினமும் வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சந்தோஷம் நிறைந்த மாதமாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக நடத்த முடியாத நல்ல காரியங்களை இந்த மாதம் நடத்தி முடிப்பீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. உயர் அதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எல்லா விஷயத்திலும் கராராக இருக்கக் கூடாது. பாத்துக்கோங்க, மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் ஆர்வம் குறையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தினம் தோறும் ஹனுமன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். எதிர்பார்த்ததை விட நிறைய நல்லது உங்களை தேடி வர போகிறது. பொன் பொருள் சேர்க்கை ஆடை ஆபரண சேர்க்க இருக்கிறது. சில பேருக்கு குழந்தை பாக்கியம் வரவும் நல்ல நேரம் காத்துக் கொண்டிருக்கிறது. உங்களால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்யுங்கள். மேலும் நன்மை நடக்கும். வேலையில் கொஞ்சம் பிரச்சனைகள் வரும். இரவு பகல் பார்க்காமல் உழைக்க வேண்டிய சூழ்நிலை வரும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகத்தான் இருக்கும். மழையால் சில பேருக்கு வியாபாரம் நஷ்டம் வரலாம். தினமும் சிவன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நினைத்ததை சாதிக்கக் கூடிய மாதமாக இருக்கும். ரொம்பவும் வெளிப்படையாக பேசுவீர்கள். எதிலும் ஒளிவு மறைவு இருக்காது. உங்களுடைய பேச்சின் திறமையால் நல்ல விஷயங்களை சாதிப்பீர்கள். வேலை செய்யும் இடத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். குறிப்பாக கலைஞர்களுக்கு இந்த மாதம் நல்லது நடக்கக்கூடிய மாதமாக இருக்கும். சில பேருக்கு அவார்டு கிடைக்கக்கூட வாய்ப்புகள் இருக்கிறது. வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நிறைய ஆர்வம் அதிகரிக்கும். புதுசாக எதையாவது சாதிக்க வேண்டும் என்று அயராது உழைப்பீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாக இருக்கும். நிம்மதி கிடைக்கும். தினமும் துர்க்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய மாதமாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தலைகுனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். திறமை வெளிப்படும். எல்லா விஷயங்களிலும் ஜெயித்துக்காட்ட முடியும் என்று சாதித்துக் காட்டக் கூடிய மாதமாக இருக்கப் போகின்றது. சேமிப்பை உயர்த்துங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் ஆர்வம் குறையும். அவர்களை பெற்றவர்கள் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதும் முகம் மலர்ச்சியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த மாதம் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். தினமும் காமாட்சியம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த மாதம் சோம்பேறித்தனத்தை விலக்கி வைக்க வேண்டும். எல்லா வேலையையும் அடுத்த நாள் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடாதீங்க. பிறகு பணமும் அடுத்த மாதம் தான் கைக்கு வந்து சேரும். இந்த மாதம் முழுவதும் நிதி நிலைமைக்கு தட்டுப்பாடு வரும். அன்றைய வேலையை அன்றே முடிக்கும்போது வேலை பளு குறையும். மேலதிகாரிகளின் ஆதரவை பெற வேண்டும். முன்கோபப்படக்கூடாது, வியாபாரத்தில் எவ்வளவு தான் உழைத்தாலும் எதிர்பார்த்த லாபத்தை சில பேரால் எட்டவே முடியாது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. கவலைப்படாதீங்க, விடாமல் முயற்சி தான் விஸ்வரூபம் கிடைக்கும். உங்களுக்கு இறைவனின் ஆசிர்வாதம் இருக்கிறது. சோம்பேறித்தனம் இல்லாமல் முயற்சி மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் வெற்றி. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை சுமை அதிகமாக தான் இருக்கும். நல்லது நடக்கும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது உங்களுக்குள் இருக்கும் சோம்பேறித்தனத்தை நீக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top