
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் தரக்கூடிய மாதமாக இருக்கும். முன்னேற்றம் தரக்கூடிய அத்தனை விஷயங்களையும் மாத துவக்கத்திலேயே செய்து விடுங்கள். மாதத்தின் முதல் 15 நாட்கள் நீங்கள் எதிர்பார்த்த நல்லது அனைத்தும் நடக்கும். சொத்து சுகம் வாங்குவது, பணத்தை சேமிப்பில் வைப்பது, வியாபாரத்தில் முதலீடு செய்வது போன்ற அத்தனை விஷயங்களையும் மாத துவக்கத்தில் செய்து விடுங்கள். மாத இறுதியில் கொஞ்சம் மந்தமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. மாத இறுதி கட்டத்தில் வேலையிலும் வியாபாரத்திலும் ஆரோக்கியத்திலும் கவனம் இருக்க வேண்டும். மாத இறுதியில் கொஞ்சம் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வாரம் தோறும் திங்கட்கிழமை விநாயகரை கும்பிடுங்கள். பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்க போகிறது. நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் வேலை செய்யக்கூடிய நேரம் கொஞ்சம் அதிகரிக்கும். அயராது உழைக்கும் போது தான் உங்களுக்கான வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எல்லா முன்னேற்றமும் கொஞ்சம் கூடுதல் பொறுப்பை கொண்டு வந்து உங்கள் கையில் சேர்க்கும். ஜாக்கிரதையாக நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள். தினமும் குலதெய்வத்தை நினைத்து வீட்டிலேயே விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நல்லது.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதானம் தேவைப்படுகிறது. அவசரமாக எந்த வேலையும் செய்யக்கூடாது. அவசரமாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாரை நம்பியும் ஜாமின் கையெழுத்து போடக்கூடாது. வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசிக்கவும். நீண்ட தூர பயணங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொறுமை தேவை. கணவன் மனைவி வாக்குவாதம் கூடவே கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும். செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
கடகம்
கடக ராசி காரர்கள் இந்த மாதம் சௌகரியமாக வாழ போகிறீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அத்தனை நல்லதையும் பிளான் பண்ணி எந்தெந்த வேலைகளை எந்தெந்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்று சரியாக வழிநடத்திச் செல்வீர்கள். பெருசாக பணத்தின் மூலமாகவோ வியாபாரத்தின் மூலமாகவோ வேலையின் மூலமாகவோ சங்கடங்கள் வராது. ஆனால் ஆரோக்கியத்தில் கவனம் இருக்க வேண்டும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். மற்றபடி வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. வியாழக்கிழமை குரு பகவான் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் வெற்றிவாகை சூடப் போகிறீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அத்தனை சந்தர்ப்ப சூழ்நிலைகளும் உங்களுக்கு கைகூடி வரும். வீட்டில் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் சரியாகும். சந்தோஷம் இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையில் மேலதிகாரிகளை கொஞ்சம் மரியாதையோடு நடத்த வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் தலைகனத்தை காட்டவே கூடாது. வியாபாரத்தில் பொறுமை தேவை. நிதானமாக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். திங்கட்கிழமை தோறும் சிவனை வழிபடுங்கள். பொறுமை உங்களை வந்து சேரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தேவையற்ற பிரச்சனைகள் வந்து போகும் மாதமாக இருக்கும். உடனே பயந்து விடக்கூடாது. பிரச்சினையிலேயே இந்த மாதம் போய்விடாது. நல்லது நாலு விஷயம் நடக்கிறது என்றால் அதற்கு எதிர் மாறாக ஒரு சில விஷயங்கள் நடக்கும். அதை நீங்கள் எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். நல்லது வரும்போது அதிக சந்தோஷப்படுவதும், கெடுதல் வரும்போது துவண்டு போய் அமர்வதும் கூடாது. கெடுதலை எதிர்த்துப் போராடக்கூடிய தைரியம் இந்த மாதம் உங்களிடத்தில் தேவைப்படுகிறது. பிரச்சனை இல்லாத மனிதர்களே இந்த உலகத்தில் கிடையாது. நல்ல நண்பர்கள் நல்ல சூழலை உங்களுக்கு என்று உருவாக்கிக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்லது நடக்கும். விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். அடுத்தவர்களுக்கு துரோகம் நினைக்காதீர்கள். நேர்வழியில் செல்லுங்கள். பிரச்சனைகளிலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்ளலாம். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வாராகி வழிபாடு செய்யுங்கள். தைரியம் பிறக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்கள், இந்த மாதம் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிக வட்டிக்கு கடன் வாங்கி எந்த முதலிடம் செய்யக்கூடாது. வீண் செலவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஆடம்பர செலவை குறைத்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை தேவை. குடும்பத்தை தம்பதியர் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து கவனித்தால் மட்டுமே இந்த மாதம் வரும் பிரச்சனையிலிருந்து தப்பிக்க முடியும். தேவையற்ற நண்பர்களிடம் இருந்து தள்ளி இருங்கள். குடும்ப விஷயங்களை அனாவசியமாக வெளி நபரிடம் சொல்ல வேண்டாம். வியாபாரம் செய்தாலும் வேலைக்கு சென்றாலும் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். மனதை அலைபாய விடக்கூடாது. தினமும் நரசிம்மர் வழிபாடு கெட்ட எண்ணங்களை அழிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் ஏற்றம் இறக்கம் நிறைந்த மாதமாக தான் இருக்கும். இந்த மாத துவக்கத்தில் சில பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் வரும். போகப் போக இந்த மாதத்தின் கடைசி இரண்டு வாரங்கள் நீங்கள் நினைத்த வேலைகளை எல்லாம் சரியாக செய்து முடிப்பீர்கள். மாதத்தின் முதல் பாகம் முயற்சிகளை முழுமூச்சோடு செய்யுங்கள். மாதத்தின் இறுதி கட்டத்தில் சந்தோஷமாக இருக்கலாம். வேலைகளை நாளைக்கு செய்யலாம் என்று தள்ளி போடாதீங்க. நேரத்தை சரியாக கணக்குப் போட்டு வேலை செய்யுங்கள். அன்றைக்கான வேலையை அன்றே முடித்து விடுங்கள். சேமிப்பு வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். நீங்கள் மாணவர்களாக இருந்தால் பெற்றவர்களின் பேச்சைக் கேட்டு நடக்கவும். ஹனுமன் வழிபாடு உங்களை நல்வழிப்படுத்தும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதிநிலைமை கொஞ்சம் சீர்படும். தேவையற்ற கடன் பிரச்சினையில் இருந்து வெளி வருவீர்கள். இறைவனின் அருளால் வருமானமும் அதிகமாக இருக்கும். சேமிப்பை அதிகப்படுத்துங்கள். வீண் விரைய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுடைய கல்வி நலனுக்காக எதிர்காலத்திற்காக சேமிப்பு இந்த மாதம் துவங்குவது நன்மையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் நினைத்த மாற்றத்தை கொண்டு வரலாம். புதிய தொழில் துவங்கலாம். வீட்டில் திருமணமாகாதவர்களுக்கு திருமண பேச்சு வார்த்தையை நடத்தலாம் நல்லதே நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். குடும்ப உறவுகளோடு சண்டை போடக்கூடாது. வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு எதிரிகளால் உண்டான பிரச்சனைகள் நீங்கும். சொந்த பந்தங்களோடு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். வியாபாரத்தில் நீங்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் முன்னேற்ற பாதையில் செல்லும். புதிய தொழில் துவங்கலாம். இந்த மாதம் நல்ல லாபத்தை ஈட்டி தரும் மாதமாக இருக்கும். வேலையை பொறுத்தவரை கொஞ்சம் பொறுமை தேவை. அவசரப்பட்டு முடிவை எடுக்கக் கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. வேலையில் இருக்கும் பிரச்சனைகள் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், வரக்கூடிய நாட்களில் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். சனிக்கிழமை பெருமாளையும் தாயாரையும் சேர்த்து வழிபடங்கள் நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பிரச்சனைகளிலிருந்து விடுபடக்கூடிய மாதமாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேறுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வங்கி கடன் முயற்சி செய்யலாம். தெரிந்தவர்களிடம் வியாபாரத்தை விரிவுபடுத்த ஐடியாவும் கேட்கலாம். நண்பர்கள் மூலம் உறவுகள் மூலம் உங்களுக்கான நன்மை கிடைக்கும். சுற்றி இருப்பவர்களிடம் நல்ல ஆதரவை பெறுவீர்கள். வேலையை பொருத்தவரை உங்களுடைய கடின உழைப்பு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். மேலதிகாரிகளுடைய ஆதரவை பெற்றுத்தரும். வீட்டில் இருப்பவர்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்தலாம். நகை அடமானம், சொத்து அடமானம் வைத்திருப்பவர்கள் அதை மீட்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். நீண்ட தூர பயணங்களை கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் தினமும் பிள்ளையாரை கும்பிடுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கூடுதல் கவனம் தேவை. மாத துவக்கத்திலேயே பணத்தை வாரி இறைக்க கூடாது. கொஞ்சம் கண்ட்ரோலாக இருங்கள். மாத இறுதி கட்டத்திற்கு தேவையான ஒரு தொகையை எடுத்து வையுங்கள். அப்போதுதான் சமாளிக்க முடியும். கடன் பிரச்சனை அதிகமானால் எதிர்காலத்தில் பிரச்சனையும் அதிகமாகும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உறவுகளோடு கவனமாக பேசவும். உங்களுக்கு வரக்கூடிய நன்மைகளை வெளிப்படையாக பேசக்கூடாது. கண் திருஷ்டி அதிகமாக விழுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வேலையில் பெருசாக பிரச்சனை இருக்காது. நல்லபடியாக செல்லும். டார்கெட் தொல்லை இருக்காது. உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். சோசியல் மீடியாவில் இருப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். கைப்பேசி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைத்ததை விட மிகப்பெரிய நல்லது நடக்கும். செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam