– Advertisement –
பொதுவாக காலை நேரத்தில் அவசர அவசரமாக வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் பள்ளிக்கூடத்திற்கு செல்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு காலை மதிய உணவுகளை தயார் செய்து தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் குடும்பத் தலைவிகளாக இருந்தாலும் வேலைக்கு செல்லும் பெண்மணிகளாக இருந்தாலும் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். இப்படி செய்யும் பொழுது காலை நேர டிபனுக்கு தொட்டுக் கொள்வதற்கு எதுவும் செய்ய முடியாமல் பலரும் கஷ்டப்படுவார்கள்.
இதனால் வீட்டில் சண்டை கூட ஏற்படலாம். ஏன் இன்னும் சில வீட்டில் குழந்தைகளும், பெரியவர்களும் ஒழுங்காக சாப்பிடாமல் சென்று விடுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகவும் எளிமையாக ஐந்தே நிமிடத்தில் ஒரு சட்னியை தயார் செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? இந்த சட்னி உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய சட்னியாகவும் அதே சமயம் எளிதில் செய்யக்கூடிய சட்னியாகவும் திகழ்கிறது. இந்த சட்னியை பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக அளவில் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பூண்டு சட்னியை எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
பூண்டு – 20 பல்மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்மல்லித்தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு – ஒரு டீஸ்பூன்தண்ணீர் – 1/4 டம்ளர்எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்கடுகு – ஒரு டீஸ்பூன்சீரகம் – ஒரு டீஸ்பூன்எலுமிச்சை சாறு – அரைப்பழம்கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் பூண்டை தோலை நீக்கி இடிகல்லில் வைத்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளுங்கள். இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கக்கூடாது. இந்த பூண்டை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு இதை அனைத்தையும் சேர்த்து தண்ணீரை ஊற்றி ஒரு கரண்டியை வைத்து நன்றாக பேஸ்டாக கலந்து கொள்ளுங்கள்.
– Advertisement –
இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அந்த பாத்திரத்தில் எண்ணெயை ஊற்ற வேண்டும். அந்த எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் கடுகு, சீரகம் போட வேண்டும். கடுகும் சீரகமும் பொறிந்த பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பேஸ்ட்டை அந்த எண்ணையில் அப்படியே போட்டு விடுங்கள். நன்றாக கலந்து விடுங்கள். ஐந்து நிமிடம் அது வேகட்டும். 5 நிமிடத்தில் எண்ணெய் பிரிந்து தனியாக வந்துவிடும்.
இப்பொழுது இதற்கு மேல் அரை எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து விட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பூண்டு சட்னி தயாராகிவிட்டது. பூண்டை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்புகள் குறைக்கப்படுகிறது. மேலும் வாயு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், செரிமான பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும் பூண்டை ஏதாவது ஒரு ரூபத்தில் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:ஆரோக்கியம் அள்ளித்தரும் பன்னீர் திராட்சை ஜூஸ் இப்படி போடுங்கள்.
அப்படிப்பட்ட பூண்டை இந்த முறையில் செய்து கொடுக்கும் பொழுது வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நமக்கு நேரமும் மிச்சமாகும். ஒருமுறை முயற்சி செய்தால் பாருங்களேன்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam