நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

கொங்கு நாட்டு ஸ்பெஷல் புளி வடை செய்முறை

கொங்கு நாட்டு ஸ்பெஷல் புளி வடை செய்முறை



நாம் அனைவரும் மாலை நேரத்தில் டீ குடிக்கும் பொழுது ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் டீயுடன் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவோம். இதை சிற்றுண்டி என்று கூட பலரும் கூறுவார்கள். வீட்டில் செய்வதற்கு பதிலாக பலரும் கடைகளில் இருந்து வாங்கி வந்து சாப்பிடுவார்கள். வீட்டிலேயே பார்த்து பார்த்து செய்யும் வழக்கத்தையும் நாம் வைத்திருப்போம். அப்படி வீட்டில் செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்றாக திகழ்வதுதான் வடை. அதிலும் குறிப்பாக பலரும் உளுந்த வடை, பருப்பு வடை என்றுதான் செய்வார்கள். இந்த பருப்பு வடையிலேயே பலவிதமான உணவுப் பொருட்களை சேர்த்து செய்வார்கள். இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதமாக கொங்கு நாட்டின் பிரபலமான வடையாக புளிவடை திகழ்கிறது. இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் புளிவடை எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.தேவையான பொருட்கள்இட்லி அரிசி – ஒரு கப்துவரம்பருப்பு – 1/4 கப்கடலைப்பருப்பு – 1/4 கப்காய்ந்த மிளகாய் – 3கருவேப்பிலை – 2 கொத்துசின்ன வெங்காயம் – 5,உப்பு – தேவையான அளவுகொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவுதுருவிய தேங்காய் – 1/2 கப்புளி – ஒரு நெல்லிக்காய் அளவுசீரகம் – ஒரு ஸ்பூன்எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு – Advertisement -செய்முறைமுதலில் ஒரு கிண்ணத்தில் இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, இவை மூன்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி இரண்டு முறை கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு இதில் காய்ந்த மிளகாய், புளி இரண்டையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழிந்த பிறகு தண்ணீரில் இல்லாமல் மிக்ஸி ஜாரில் போட்டு இதனுடன் சின்ன வெங்காயம், கருவேப்பிலை கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்து சற்று கொரகொரப்புடன் அரைத்துக் கொள்ள வேண்டும்.அரைத்த இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இதில் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விட்டுக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவர எடுத்து அதில் லேசாக எண்ணெய் தடவி இதை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடையளவிற்கு தட்டிக் கொள்ள வேண்டும். தட்டு வடை தட்டுவதை விட சற்று கனமாக இருக்க வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து வடையை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நாம் தட்டி வைத்திருக்கும் இந்த வடையை அப்படியே எண்ணெயில் போட வேண்டும். – Advertisement – இது எண்ணெய்க்கு அடியில் சென்று வெந்து மேலே வரும். அப்பொழுது திருப்பி போட்டு இரண்டு புறமும் வேகவைத்து எடுக்க வேண்டும். இதற்கு தொட்டுக் கொள்வதற்கு தேங்காய் சட்னி மிகவும் அருமையாக இருக்கும். எப்பொழுதும் போல பருப்பு வடை உளுந்து வடை செய்யாமல் இப்படி ஒரு முறை புளிவடை செய்து கொடுத்துப் பாருங்கள். சுவையும் அற்புதமாக இருக்கும். சற்று வித்தியாசமாகவும் இருக்கும்.இதையும் படிக்கலாமே:ரோஸ் பிஸ்தா தேங்காய் பர்பிஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு உணவு பொருட்கள் இருக்கும். அந்த உணவுப் பொருட்களை செய்து தருவதன் மூலம் நமக்கும் ஒரு வித திருப்தி ஏற்படும். அதை உண்பவர்களுக்கும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரே மாதிரி செய்து போர் அடிக்காமல் இப்படி சற்று வித்தியாசமாக செய்து கொடுங்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
    0
    Your Cart
    Empty CartYour cart is emptyReturn to Shop
    Secure Checkout
    Fast Shipping
    Easy Returns
    I am Online
    I am Online