நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

சிம்பிள் பூரி கிழங்கு | Simple poori kizhangu

சிம்பிள் பூரி கிழங்கு | Simple poori kizhangu



பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா இருந்தால் தான் சரியான காம்பினேஷன்! ஹோட்டலில் கொடுப்பது போல சுவையான பூரி கிழங்கு மசாலா நம் வீட்டில் செய்தால் வருவதில்லை என்று புலம்புபவர்கள், இந்த முறையில் ஒரு முறை பூரி கிழங்கு செய்து பாருங்கள், டேஸ்ட் அப்படி இருக்கும்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் சுவையான பூரி கிழங்கை எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.பூரி கிழங்கு மசாலா செய்ய தேவையான பொருட்கள் :கடலை எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்கடுகு – அரை ஸ்பூன்உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்சீரகம் – அரை ஸ்பூன்பச்சை மிளகாய் – இரண்டுஉருளைக்கிழங்கு – கால் கிலோபெரிய வெங்காயம் – இரண்டு – Advertisement -கேரட் – ஒன்றுஉப்பு – தேவையான அளவுமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைதண்ணீர் – ஒரு கப்கடலைமாவு – 2 டேபிள் ஸ்பூன்கருவேப்பிலை, கொத்தமல்லி – கார்னிஷ் செய்யபூரி கிழங்கு மசாலா செய்முறை விளக்கம் :இந்த பூரி கிழங்கு மசாலா செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உருளைக் கிழங்குகளை சுத்தம் செய்து கழுவி, தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின் குக்கரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலை எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். கடலை எண்ணெய் சேர்த்து செய்யும் பொழுது ருசி சூப்பராக இருக்கும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். – Advertisement – கடுகு பொரிந்து வந்ததும், உளுத்தம் பருப்பு சேர்த்து பின் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். இதனுடன் காரத்திற்கு இரண்டு சின்ன பச்சை மிளகாய்களை இரண்டாக கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். ரெண்டு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கும் பொழுது, தோல் உரித்த உருளைக்கிழங்குகளை நான்கைந்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின் உருளைக்கிழங்குகளை குக்கரில் சேர்த்து வதக்குங்கள். இவற்றுடன் ஒரு கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள்.இதையும் படிக்கலாமே:12.4.2025 பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்ரெண்டு நிமிடம் நன்கு வதக்கியதும் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை நன்கு வதக்கி விட்டு, ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வையுங்கள். மூன்று விசில் விட்டு எடுத்தால் உருளைக்கிழங்கு நன்கு வெந்துவிடும். வெந்தவற்றை கரண்டியை பயன்படுத்தி நன்கு மைய நசுக்கி விடுங்கள். பின்னர் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கடலை மாவை கொஞ்சம் தண்ணீரில் நன்கு கரைத்து, கட்டிகள் இல்லாமல் உருளைக் கிழங்குடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் நன்கு கொதித்த பின்பு அடுப்பை அணைத்து கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி இதன் மேல் தூவி ஒரு பிரட்டு பிரட்டுங்கள். அவ்வளவுதான், அருமையான பூரி கிழங்கு ரெடி!

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
    0
    Your Cart
    Empty CartYour cart is emptyReturn to Shop
    Secure Checkout
    Fast Shipping
    Easy Returns
    I am Online
    I am Online