நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

பீர்க்கங்காய் கடையல் | Peerkangai kadayal

பீர்க்கங்காய் கடையல் | Peerkangai kadayal


– Advertisement –

இந்த வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக்கும் பீர்க்கங்காய் கடையல், கிராமத்து ஸ்டைலில் 10 நிமிடத்தில் சுலபமாக இப்படி செய்து பாருங்கள், எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். சூடான சாதத்துடன் அப்படியே பிசைந்து சாப்பிடும் பொழுது நாவிற்கும், மனதிற்கும் இனிமையை கொடுக்கும். சுவையான இந்த பீர்க்கங்காய் கிராமத்து ஸ்டைல் கடையல் நாமும் எப்படி செய்வது? என்பதை தான் தொடர்ந்து சமையல் குறிப்பு சார்ந்த இந்த பதிவில் அறிய இருக்கிறோம்.
பீர்க்கங்காய் கடையல் செய்ய தேவையான பொருட்கள் :
சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்கடுகு – ஒரு டீஸ்பூன்சீரகம் – ஒரு டீஸ்பூன்சோம்பு – 1/2 டீஸ்பூன்கருவேப்பிலை – 1 கொத்துபெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்பச்சை மிளகாய் – 4பூண்டு பற்கள் – 10சின்ன வெங்காயம் – 30தக்காளி – 4பீர்க்கங்காய் – 2மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்உப்பு – தேவையான அளவுகொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
– Advertisement –

பீர்க்கங்காய் கடையல் செய்முறை விளக்கம் :
நீர் சத்து அதிகம் நிறைந்துள்ள பீர்க்கங்காயில் ஏராளமான வைட்டமின்கள் உள்ளன. வைட்டமின் சி, துத்தநாகம், மெக்னீசியம், இரும்புச்சத்து, நார் சத்து போன்றவையும் உள்ளன. உடலை வலுவாக்கி குளிர்ச்சியாக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. கல்லீரல் பிரச்சனைகள், கண்பார்வை கோளாறுகள், மலசிக்கல், வீக்கம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது.
எடை இழப்பு, சரும ஆரோக்கியம் போன்றவற்றையும் அள்ளித் தருகிறது. இதனை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். கிராமத்து ஸ்டைலில் ருசியாக எப்படி பத்தே நிமிடத்தில் கடைவது? என்பதை பார்ப்போம். இதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை முன்னரே உரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

அடுப்பில் ஒரு மண்சட்டி அல்லது அடிகனமான பாத்திரம் ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் சீரகம், சோம்பு ஆகியவற்றை தாளித்தம் செய்யுங்கள். பின்னர் கருவேப்பிலையை உருவி போட்டு, உங்கள் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை வதங்கியதும் பெருங்காயத்தூள் சேர்த்து, நீங்கள் உரித்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு பற்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:விநாயகரை வசியம் செய்ய பரிகாரம்
கண்ணாடி பதம் வர நன்கு வதங்கியதும், பழுத்த நான்கு தக்காளி பழங்களை துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை மசிய வதங்கி வந்ததும், தோல் நீக்கி சுத்தம் செய்துள்ள பீர்க்கங்காய்களை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒருமுறை நன்கு பிரட்டி விடுங்கள். பின்பு சட்டியை மூடி வையுங்கள். இடை இடையே கிளறி விட வேண்டும். குழைய நீரெல்லாம் வற்றி நன்கு வெந்து வந்ததும் ஒரு கைப்பிடி அளவிற்கு நறுக்கிய கொத்தமல்லி தழையை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரே சட்டியில் இதை செய்து முடித்து விடலாம். ஓரளவுக்கு ஆறியதும் மத்து வைத்து கடையுங்கள். அவ்வளவுதாங்க, சூப்பரான ஆரோக்கியம் நிறைந்த பீர்க்கங்காய் கடையல் ரெடி!

– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
    0
    Your Cart
    Empty CartYour cart is emptyReturn to Shop
    Secure Checkout
    Fast Shipping
    Easy Returns
    I am Online
    I am Online