– Advertisement –
காலையில் எழுந்ததும் என்ன டிபன் செய்வது என்பது பற்றி யோசித்து கொண்டு இருப்பவர்களும், எப்பொழுதும் இட்லி தோசை தான் செய்வதா என்று நினைப்பவர்களும் சற்று வித்தியாசமாக செய்யக்கூடிய ஒரு டிபன் தான் பொரி உப்புமா.
ஸ்நாக்ஸிற்காக வாங்கிய பொரி மீதம் இருக்கும் பட்சத்தில் அல்லது பதத்துப்போன சூழ்நிலையில் வீட்டில் இருப்பவர்கள் யாரும் அதை சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில் அந்த பொரியையும் நாம் உப்புமாவாக தயார் செய்து கொடுத்தோம் என்றால் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு உப்புமா ரெசிபியை தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
பொரி – 2 கப்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது
தக்காளி – 2
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 3/4 டீஸ்பூன்
செய்முறை
முதலில் பொரியை எடுத்து சுத்தமான தண்ணீருக்குள் போட்டு இரண்டு நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த பொரியை தண்ணீரில் இல்லாமல் பிழிந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இதே போல் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகை சேர்க்க வேண்டும். கடுகு வெடித்ததும் இதில் கருவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் போன்றவற்றை சேர்த்து நன்றாக சிவக்க வதக்க வேண்டும்.
– Advertisement –
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இதில் தக்காளியை சேர்த்து வெங்காயம் தக்காளிக்கு தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். பொரியில் ஏற்கனவே உப்பு இருக்கும் என்பதால் இந்த வெங்காயம் தக்காளிக்கு மட்டும் நம் உப்பு சேர்த்தால் போதும். தக்காளி நன்றாக மசிந்து வரும் பொழுது இதனுடன் கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
மிளகாய் தூளின் பச்சை வாடை நீங்கி எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கிக் கொண்டே இருங்கள். எண்ணெய் தனியாக பிரிந்த பிறகு நாம் தண்ணீரில் இருந்து எடுத்து வைத்த பொரியை இதனுடன் சேர்த்து கிளற வேண்டும். இவ்வாறு கிளரும் பொழுது மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும். மசாலாவும் பொரியும் நன்றாக கலந்த பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். மிகவும் சுவையான பொரி உப்புமா தயாராகிவிட்டது. இதை நாம் டிபன் ஆகவும் கொடுக்கலாம், ஸ்னாக்ஸ் ஆகும் செய்து கொடுக்கலாம்.
இதையும் படிக்கலாமே: பிரட் மெதுவடை செய்முறை
அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த முறையில் செய்து கொடுக்க முடியும் என்னும் பட்சத்தில் எதற்காக பொரியை வீணாக்க வேண்டும். ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam