– Advertisement –
இன்றைய காலத்தில் இருக்கும் பலருக்கும் சத்துக் குறைபாடு என்பது அதிக அளவில் இருக்கிறது. இதற்கு காரணம் ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் இருப்பது தான். அதிலும் குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்றால் அதனால் அவர்களுடைய உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இப்படி அவர்களுடைய வளர்ச்சி பாதிக்கப்படாமல் சீராக இருக்க வேண்டும் என்றால், அவர்களுடைய வளர்ச்சிக்கு தேவையான அளவு சத்துக்கள் கிடைக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு முக்கியமான சத்துதான் புரத சத்து. இந்த புரதச்சத்து அதிகம் இருக்கக்கூடியது பயறு வகைகளில் தான். அதிலும் குறிப்பாக முளைகட்டிய பயறு வகைகளில் அதிக அளவில் புரத சக்தி இருக்கிறது. முளைகட்டிய பயிறு வகைகளை எந்த வடிவில் நாம் செய்து கொடுத்தாலும் அதை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அந்த முளைகட்டிய பயறை வைத்து அடை தோசை செய்து தரும் பொழுது அதை என்னவென்று தெரியாமலேயே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு அடை தோசை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
முளைகட்டிய பயறை சாப்பிடுவதன் மூலம் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கிறது. செரிமானம் அதிகரிக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதில் ஆன்டி-ஆக்சைடுகள், விட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் இருக்கிறது. இதனால் ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தலை கூட நம்மால் பெற முடியும்.
தேவையான பொருட்கள்
முளைகட்டிய பச்சை பயிறு – 200 கிராம்
கடலைப்பருப்பு – 200 கிராம்
துவரம் பருப்பு – 200 கிராம்
அரிசி – 200 கிராம்
தேங்காய் – 1
வெங்காயம் – 2
கொத்தமல்லி – ஒரு கட்டு
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3
செய்முறை
முதலில் பச்சைப் பயறை இரவு முழுவதும் ஊற வைத்து அதன் தண்ணீரை வடித்து விட்டு ஒரு மெல்லிய காட்டன் துணியில் கட்டி வைக்க 24 மணி நேரம் கழித்து பச்சைப்பயிறு முளைகட்டி இருக்கும். பிறகு அரிசியை ஆறு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். கடலைப்பருப்பையும் துவரம் பருப்பையும் நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
இப்பொழுது கிரைண்டரிலோ அல்லது மிக்ஸி ஜாரியோ எடுத்துக்கொண்டு அதில் முதலில் துவரம் பருப்பையும் கடலை பருப்பையும் சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும். அடுத்ததாக ஊற வைத்திருக்கும் அரிசியை அரைக்க வேண்டும். ஒரு தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள். அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இவை அனைத்தும் கால்பங்கு அடைந்த பிறகு துருவி வைத்திருக்கும் தேங்காயை அதில் சேர்த்து அரைக்க வேண்டும்.
அரைபட ஆரம்பித்ததும் முளைகட்டிய பச்சைப் பயிரை சேர்த்து இவை அனைத்தையும் கொரகொரப்பாக ரவை பதத்திற்கு வரும் அளவிற்கு அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை அதிக அளவில் சேர்க்க வேண்டாம். மாவு தயாரானதும் அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து விட்டு தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
– Advertisement –
ஒரு ஐந்து நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு எப்பொழுதும் தோசை ஊற்றுவது போல் தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் குறைந்த தீயில் வைத்து அடை தோசையாக ஊற்ற வேண்டும். ஒரு புறம் வெந்த பிறகு அதை திருப்பி போட்டு எண்ணெய் ஊற்றி மற்றொரு புறம் வேகவைத்து எடுத்து தந்துவிடலாம். மிகவும் சுவையான அதேசமயம் ஆரோக்கியமான முளைகட்டிய பச்சைப் பயிர் அடை தோசை தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே காராபூந்தி குருமா செய்முறை
உடலுக்கு பல அற்புத சத்துக்களை தரக்கூடிய இந்த பயறு வகையை குழந்தைகளும் பெரியவர்களும் சாப்பிடுவதன் மூலம் அவர்களுடைய ஆரோக்கியம் மேம்படும். முயற்சி செய்து பாருங்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam