நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

ரவை கொழுக்கட்டை செய்முறை | rava kolukattai preparation in tamil


– Advertisement –

பொதுவாகவே மாலை நேரத்தில் வீடு திரும்பக் கூடிய குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி அந்த நேரத்தில் ஏதாவது ஒரு சிற்றுண்டியை சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் தொடர்பான பொருட்களை சேர்க்காமல் ஆவியில் வேகவைத்த ஆரோக்கியமான பொருட்களை செய்து தந்தால் அவர்களுக்கு இன்னும் நன்றாக இருக்கும் என்று யோசிப்போம். இப்படி ஆவியின் வேக வைத்து செய்யக்கூடிய ஒரு இனிப்பு கொழுக்கட்டை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
ரவை – 1/2 கப்வெல்லம் – 3/4 கப்துருவிய தேங்காய் – 1/4 கப்முந்திரி – 10நெய் – 2 டேபிள் ஸ்பூன்ஏலக்காய் – 4
– Advertisement –

செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்ற வேண்டும். நெய் உருகியதும் அதில் பொடியாக ஒடித்து வைத்திருக்கும் முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும். முந்திரி லேசாக நிறம் சிவந்த பிறகு துருவி வைத்திருக்கும் தேங்காயை அதனுடைய சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக வறுபட்டவுடன் அதை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
மறுபடியும் அதே கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி நெய் உருகியதும் நாம் எடுத்து ரவையை அதில் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பொன்னிறமாக ரவை வறுபட்ட பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள். இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அதில் பொடித்து வைத்திருக்கும் வெள்ளத்தையும் சேர்த்து நன்றாக கரைக்க வேண்டும் .கம்பி பதம் தேவையில்லை வெல்லம் நன்றாக கரைந்த பிறகு இதை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

இப்பொழுது நாம் ரவை வறுத்து வைத்திருந்த பாத்திரம் இருக்கும் அல்லவா? அதை அடுப்பில் வைத்து அதில் நாம் கரைத்து வைத்திருக்கும் வெல்ல கரைசலை ஊற்றி கொதிக்க விட வேண்டும். இது லேசாக கொதி வந்ததும் இதில் நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, தேங்காய், ரவை போன்றவற்றை சேர்க்க வேண்டும். இதனுடன் நாலு ஏலக்காயை பொடி செய்து சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும். இது கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்.
இப்பொழுது ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி மூடி போட்டு தண்ணீரை கொதிக்க விடுங்கள். அதற்குள் வாழை இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் நெய்யை தடவி நாம் வதக்கி வைத்திருக்கும் அந்த ரவை கலவையை அதில் வைத்து வாழை இலையால் மூடி இட்லி தட்டில் எடுத்து வைத்து விடுங்கள். இட்லி பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் கொதித்த பிறகு இட்லி தட்டை உள்ளே வைத்து ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான இனிப்பு ரவை கொழுக்கட்டை தயாராகிவிட்டது. இதற்கு செலவாகும் நேரம் மிகவும் குறைவு என்பதால் நினைத்த உடனே செய்துவிட முடியும்.
இதையும் படிக்கலாமே:பூண்டு மிளகாய் சாதம் செய்முறை
இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி புதிது புதிதாக ஏதாவது வித்தியாசமான சுவையை ருசிக்க வேண்டும் சாப்பிட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள் அதனால் அவர்களுக்கு எப்போதும் போல் ஒரே மாதிரியாக தின்பண்டங்களை தராமல் இப்படி சற்று வித்தியாசமான அதே சமயம் குறைந்த நேரமே செலவு செய்யக்கூடிய உணவுப் பொருட்களையும் செய்து தரலாம்.

– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
    0
    Your Cart
    Empty CartYour cart is emptyReturn to Shop
    Secure Checkout
    Fast Shipping
    Easy Returns
    I am Online
    I am Online