நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

காராபூந்தி குருமா செய்முறை | Kaara boonthi kuruma recipe in tamil

காராபூந்தி குருமா செய்முறை | Kaara boonthi kuruma recipe in tamil


– Advertisement –

பொதுவாக நம்முடைய உணவு வகைகளில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு பெரிய பங்கு இருக்கிறது. தினமும் இவற்றில் ஏதாவது ஒன்றை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொண்டு தான் வருகிறோம். அப்படி ஏதாவது ஒன்றை செய்யும்பொழுது அதற்கு தொட்டுக் கொள்வதற்காக ஏதாவது ஒரு சட்னி வகையையோ அல்லது குருமா வகை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். சட்னியாக இருந்தாலும் குருமாவாக இருந்தாலும் எப்பொழுதும் ஒரே மாதிரி செய்தோம் என்றால் அது போர் அடித்து விடும். செய்கின்ற நமக்கு ஒரு வித வெறுப்பு ஏற்பட்டுவிடும்.
அதை தவிர்த்து எளிமையான முறையில் சற்று வித்தியாசமாக அதே சமயம் சுவையில் அற்புதமாக இருக்கக்கூடிய ஏதாவது ஒன்றை நடுவில் மாற்றி மாற்றி செய்தால்தான் சமைக்கிற நமக்கும் திருப்தியாக இருக்கும், சாப்பிடுபவர்களுக்கும் விருப்பமாக இருக்கும். அப்படி அருமையான சுவையில் வித்தியாசமாக செய்யக்கூடிய காராபூந்தி குருமாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்

காராபூந்தி – 150 கிராம்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு உளுந்து – ஒரு டீஸ்பூன்
பட்டை – 2 துண்டு,
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
தேங்காய் – 1/2 மூடி
சோம்பு – ஒரு ஸ்பூன்
கசகசா – ஒரு ஸ்பூன்

செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்தை சேர்க்க வேண்டும். கடுகு நன்றாக வெடித்ததும் அதில் பட்டை, இரண்டாக கீறிய பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சை வாடை நீங்கும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
பச்சை வாடை நீங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வெந்து மசிந்த பிறகு அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா இவை அனைத்தையும் சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு பிறகு இதில் நான்கு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
– Advertisement –

பிறகு இதை மூடி போட்டு பத்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய், சோம்பு, கசகசா இவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். 10 நிமிடம் கழித்து மூடியை திறந்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
ஐந்து நிமிடம் நன்றாக கொதித்த பிறகு அதில் காரா பூந்தியை சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு பிறகு கொத்தமல்லியை தூவி இறக்கி விட வேண்டும். மிகவும் சுவையான அருமையான காராபூந்தி குருமா தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே கருவேப்பிலை பூண்டு தொக்கு செய்முறை
தக்காளி குருமா, உருளைக்கிழங்கு குருமா, பட்டாணி குருமா என்று வைக்கும் பொழுது நடுவே இப்படி காராபூந்தி குருமாவையும் வைத்து கொடுக்க இட்லி, தோசை காலி ஆகிறதோ இல்லையோ குருமா காலியாகி விடும். முயற்சி செய்து பாருங்கள்.

– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online