நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

கிரீன் சட்னி சாண்ட்விச் | Green chutney sandwich

கிரீன் சட்னி சாண்ட்விச் | Green chutney sandwich



சம்மர் லீவ் விட்டு விட்டாலே வீட்டில் குழந்தைகள் ஏதாவது செய்து கொடுங்கள் என்று நச்சரிக்க துவங்கி விடுவார்கள். மாலையில் சுட சுட சூப்பரான இந்த கிரீன் சட்னி சாண்ட்விச் ரெசிபி செய்து கொடுத்து பாருங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ரொம்ப சுலபமாக வெறும் புதினா, கொத்தமல்லி கொண்டு தயார் செய்யப்படும் இந்த சாண்ட்விச் ஆரோக்கியமானது. டேஸ்டியான கிரீன் சட்னி சாண்ட்விச் ரெசிபி சுலபமாக எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.கிரீன் சட்னி சாண்ட்விச் செய்ய தேவையான பொருட்கள் :சட்னிக்காக:புதினா இலை – 1 கப் (சுத்தம் செய்து கொள்ளவும்)கொத்தமல்லி இலை – 1 கப்பச்சை மிளகாய் – 1இஞ்சி – 1/2 இன்ச்உப்பு – தேவையான அளவுஎலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ்பூன்தண்ணீர் – சிறிதளவு (அரைக்க)சாண்ட்விச்சுக்காக:பிரெட் – 4 துண்டுகள்வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் – Advertisement -கிரீன் சட்னி சாண்ட்விச் செய்முறை விளக்கம் :இந்த கிரீன் சட்னி சாண்ட்விச் தயார் செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சட்னி தயார் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு புதினா இலைகளை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல ஒரு கப் கொத்தமல்லித் தழைகளையும் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பச்சை மிளகாயை உங்கள் காரத்தின் அளவிற்க்கு ஏற்ப எடுத்து வையுங்கள்.பின்னர் ஒரு மிக்ஸர் ஜாரில் இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை இன்ச் அளவிற்கு இஞ்சி தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி சேருங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறை சேர்த்து, அதனுடன் உப்பு போட்டு, தேவையான அளவிற்கு கொஞ்சம் போல தண்ணீர் ஊற்றி நைசாக சட்னியை கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதுதான் கிரீன் சட்னி! இந்த கிரீன் சட்னி சாட் உணவுகளுடன் தொட்டுக் கொள்ள பெரும்பாலும் கொடுப்பார்கள். – Advertisement – டோஸ்டர் பயன்படுத்துபவர்கள் ரெண்டு பிரட் துண்டுகளுக்கு இடையே வெண்ணெயை தடவி, பின்னர் அதன் மீது இந்த கெட்டியான கிரீன் சட்னியை வைத்து பரப்புங்கள். அப்போது தான் பிரட்டில் சட்னி ஊறாமல் இருக்கும். பின்னர் வழக்கம் போல நீங்கள் டோஸ்ட் செய்து அப்படியே சாப்பிடலாம். டோஸ்டர் இல்லாதவர்கள் தோசை கல்லில் வெண்ணெயை தடவி, பிரட் துண்டுகளுக்கு இடையே இந்த கிரீன் சட்னியை தடவி, இருபுறமும் நன்கு வெண்ணெயில் டோஸ்ட் செய்து கொள்ளுங்கள்.இதையும் படிக்கலாமே:தேய்பிறை சங்கடஹர சதுர்த்திவெறுமனே இப்படி சாப்பிட விரும்பாதவர்கள் கிரீன் சட்னி உடன் வட்ட வடிவில் மெல்லியதாக கொஞ்சம் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி, ஒரு சில துண்டுகளை வைத்து, உடன் துருவிய கேரட், வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை உள்ளே சேர்த்து பின்னர் டோஸ்ட் செய்தும் சாப்பிடலாம். இது இன்னும் ருசியாக இருக்கும். சுவையான கிரீன் சட்னி சாண்ட்விச் தயார் செய்து வைத்த பின்பு, அதனை திரிகோணம் அல்லது நாற்கர வடிவில் துண்டுகளாக நறுக்கி பின்னர் ஒரு பிளேட்டில் வைத்து ஸர்வ் பண்ணலாம், டேஸ்ட் சூப்பராக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online