நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

கீரை பருப்பு கூட்டு | Keerai paruppu kootu

கீரை பருப்பு கூட்டு | Keerai paruppu kootu



எந்த வகையான கீரையை கூட்டு வைக்க சமைப்பதாக இருந்தால், பொதுவாக கீரை உடன் பருப்பையும் சேர்த்து குக்கரில் விசில் விட்டு வைக்கிறார்கள். இதைவிட பருப்பை தனியாக வேக வைத்து, இப்படி ஒரு முறை கீரை கூட்டு வச்சு பாருங்க, ருசி வேற லெவலில் இருக்கும். சுலபமான முறையில் கீரை பருப்பு கூட்டு மிகவும் டேஸ்டியாக எப்படி சமைப்பது? என்னும் சமையல் குறிப்பு சார்ந்த ரகசியத்தைத் தான் இந்த பதிவில் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.கீரை பருப்பு கூட்டு செய்ய தேவையான பொருட்கள்: கீரை – 1 கட்டு (ஆய்ந்து சுத்தம் செய்தது)துவரம் பருப்பு – 100 கிராம்பாசிப்பருப்பு – 75 கிராம்மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்பெருங்காயத்தூள் – சிட்டிகை அளவுசின்ன வெங்காயம் – 10தக்காளி – 2புளி – சிறு நெல்லிக்காய் அளவுதாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்கடுகு – ஒரு ஸ்பூன்உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்சீரகம் – ஒரு ஸ்பூன்பூண்டு – 4 பல்வரமிளகாய் – 5உப்பு – தேவையான அளவு. – Advertisement -கீரை பருப்பு கூட்டு செய்முறை விளக்கம்:முதலில் வாங்கி வந்த கீரையை நன்கு கழுவி அலசி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளுங்கள். துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு ஆகியவைகளை கழுவி அலசி தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் ஊற வையுங்கள். சின்ன வெங்காயத்தை தோலுரித்து கழுவி வையுங்கள். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வையுங்கள். இப்போது பருப்பு வகைகளை குக்கரில் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கொஞ்சம் உப்பு போட்டு குக்கரை மூடி வைத்து, நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பின் அடுப்பை பற்ற வைத்து அதில் அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும், சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் இடித்த பூண்டு பற்களுடன், இரண்டாக உடைத்த வரமிளகாய்களை சேர்த்து வதக்குங்கள். பின்னர் தோலுரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் பாதி வதங்கியதும், பொடி பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களை சேர்த்து வதக்குங்கள். – Advertisement – இதையும் படிக்கலாமே:முதுமையிலும் வாழ்க்கை சிறக்க பரிகாரம்.வெங்காயம், தக்காளி நன்கு மசிந்து வந்ததும், ஆய்ந்து சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள கீரையை நறுக்கி, இதனுடன் சேர்த்து சுருள வதக்க வேண்டும். கீரை வதங்கியதும், வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது தேவையான அளவிற்கு உப்பை போட்டு சரிபார்த்து நன்கு கொதிக்க விடுங்கள். கீரை கொதித்து கூட்டு போல நன்கு கெட்டியாக திரண்டு வந்ததும், அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், அருமையான சுலபமான முறையில் செய்யக் கூடிய கீரை பருப்பு கூட்டு தயார்! இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, கீரை கூட்டு வேண்டாம் என்று சொல்பவர்களும், இனி விரும்பி சாப்பிடுவார்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online