நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

சீரக குழம்பு செய்முறை | Seeraga kulambu recipe in tamil

சீரக குழம்பு செய்முறை | Seeraga kulambu recipe in tamil


– Advertisement –

நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அஞ்சறைப்பெட்டி தான் அன்றைய காலத்தில் மருந்தகமாக செயல்பட்டது. நம்முடைய முன்னோர்கள் உடலுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விட்டால் உடனே சமையலறைக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பொருட்களை தான் கொடுப்பார்கள். அதனால் தான் அவர்களால் அந்த காலத்தில் அவ்வளவு ஆரோக்கியமாக வாழ முடிந்தது. ஆனால் இன்றைய காலத்தில ஒரு சிறிய உடல்நிலை பாதிப்பாக இருந்தாலும் உடனே ஆஸ்பத்திரிக்கு போய் அங்கு கொடுக்கக்கூடிய மருந்துகளையும் ஊசிகளையும் போட்டு நம்முடைய இயற்கையான உடல் அமைப்பையே நாம் மாற்றி விடுகிறோம்.
அந்த வகையில் நம்முடைய வீட்டில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கக்கூடியது தான் சீரகம். சீரகம் என்றாலே நம்முடைய அகத்தை சீராக்கக் கூடியது என்று அர்த்தம். நம்முடைய உடலில் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்தும் சீராக அதாவது சரியாக செயலாற்ற வேண்டும் என்றால் அது சீரகத்தால் மட்டுமே முடியும். அதனால்தான் நம்முடைய சமையலில் நாம் சீரகத்தை அதிக அளவில் சேர்க்கிறோம். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது ரசம் வைத்து கொடுப்பதற்கு காரணமும் அதுதான். மேலும் அஜீரண கோளாறு நீக்கி ஆரோக்கியமான ஜீரண சக்தியை ஏற்படுத்தி ஜீரண உறுப்புகளை சீராக இயங்கச் செய்யும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சீரகத்தை வைத்து சீரக குழம்பு எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்

தனியா – 100 கிராம்
குண்டு மிளகாய் – 50 கிராம்
காஷ்மீர் மிளகாய் – 50 கிராம்
மஞ்சள் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
குண்டு மிளகாய் – 4
வெங்காயம் – 2
கடுகு – ஒரு டேபிள் ஸ்பூன்
உளுந்து – 1/2 டேபிள்ஸ்பூன்
பூண்டு – ஒரு கைப்பிடி அளவு
கருவேப்பிலை – ஒரு கொத்து
தக்காளி – 3
தண்ணீர் – 1/2 லி
உப்பு – தேவையான அளவு
புளி – 100 கிராம்
வெல்லம் – ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
வறுத்த சீரகப் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தனியா, குண்டு மிளகாய், காஷ்மீரி மிளகாய், மஞ்சள் தூள் இவை நான்கையும் போட்டு நன்றாக பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் நான்கு குண்டு மிளகாய் போட வேண்டும்.
மிளகாய் சிவந்த பிறகு கடுகு உளுந்து சேர்க்க வேண்டும். கடுகு வெடித்து உளுந்து சிவந்ததும் தோல் உரித்த பூண்டை வதக்க வேண்டும். பூண்டு சிவக்க ஆரம்பித்ததும் அதில் கருவேப்பிலையை சேர்த்து பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். குறைந்தது ஐந்து நிமிடமாவது அடுப்பில் வைத்து வதக்க வேண்டும்.
– Advertisement –

பிறகு மூன்று தக்காளியை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்க ஆரம்பித்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியில் இருந்து ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவு பொடியை போட்டு அரை லிட்டர் தண்ணீரை ஊற்றி அதன் பச்சை வாடை போகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பையும் சேர்த்து புளி கரைசலையும் ஊற்றி ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத்தையும் போட்டு 15 நிமிடம் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
இவை அனைத்தும் நன்றாக கொதித்து புளியின் பச்சை வாடை நீங்கிதும் அதில் பெருங்காயத்தூளை சேர்க்க வேண்டும். பிறகு ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை அணைத்த பிறகு சீரகப் பொடியை போட வேண்டும். சீரகத்தை வெறும் சட்டியில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை போட்டு ஒருமுறை கலந்து விட்டால் போதும். சீரகப் பொடியை போட்ட பிறகு கொதிக்க வைக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே வேர்க்கடலை பூண்டு பொடி சாதம் செய்முறை
இந்த முறையில் சீராக குழம்பை செய்யும் பொழுது இதில் இருக்கக்கூடிய அனைத்து விதமான மருத்துவ குணமிகுந்த பொருட்களும் நம் உடலை ஆரோக்கியமாக பேணி பாதுகாக்கும்.

– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online