நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

சுவையான பன் தோசை | Suvaiyana bun dosai

சுவையான பன் தோசை | Suvaiyana bun dosai



காலையில் டிபனுக்கு என்னடா செய்வது? என்று யோசிக்கும் பொழுது பெரும்பாலும் இட்லி, தோசையில் போய் தான் முடியும். சதா இட்லி, தோசை என்று செய்து போரடித்து போனவர்களுக்கு, இந்த பன் தோசை வித்தியாசமான சுவையை கொடுக்கும். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த பன் தோசை ரெசிபி ரவையை வைத்து செய்யப் போகிறோம். வாங்க சுவையான பன் தோசை ரெசிபி செய்முறை விளக்கத்தை இந்த சமையல் குறிப்பு பதிவை படித்து அறிந்து கொள்வோம்.பன் தோசை செய்ய தேவையான பொருட்கள் :ரவை – ஒரு கப்கெட்டி தயிர் – அரை கப்தண்ணீர் – தேவையான அளவுசமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்உளுந்து – அரை டீஸ்பூன்சீரகம் – அரை டீஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துஇஞ்சி – ஒரு இன்ச்பச்சை மிளகாய் – ஒன்றுபெரிய வெங்காயம் – ஒன்றுகொத்தமல்லி – சிறிதளவுசமையல் சோடா – ஒரு சிட்டிகைஉப்பு – தேவையான அளவு – Advertisement -பன் தோசை செய்முறை விளக்கம் :இந்த பன் தோசை செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் ஒரு கப் அளவிற்கு வறுத்த ரவையை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை கப் அளவிற்கு கெட்டியான தயிர் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். பின்னர் அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கட்டிதட்டாமல் மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து அப்படியே 10 நிமிடம் ஊற விட்டு விடுங்கள்.ரவை நன்கு தயிருடன் ஊறி பெரிதாகும். அதற்குள் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின்னர் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேருங்கள். – Advertisement – ஒரு பச்சை மிளகாயையும், ஒரு இன்ச் இஞ்சியையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கி போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின்பு, ஒரு மிக்ஸர் ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஊறவைத்த ரவையை சேர்த்து, அதனுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு நைசாக மாவு போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.இதையும் படிக்கலாமே:பங்குனி உத்திரம் தினை மாவு விளக்குதோசை மாவு பதத்திற்கு மாவு இருக்க வேண்டும். பின்னர் அதனுடன் நீங்கள் தயார் செய்து வைத்துள்ள தாளிப்பையும் சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை கொஞ்சம் போல சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்பொழுது பன் தோசை தயாரிக்க தேவையான மாவு கிடைத்துவிட்டது. அடுப்பில் ஒரு சிறிய கடாய் அல்லது தாளிப்பு கரண்டி வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, ரெண்டு கரண்டி மாவை எடுத்து ஊற்றுங்கள். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு ஒருபுறம் வெந்ததும், திருப்பி போடுங்கள். அவ்வளவுதான் சூப்பரான மிருதுவான பன் தோசை இப்பொழுது தயார்! இதனுடன் சாப்பிடுவதற்கு கார சட்னி இருந்தால் அருமையாக இருக்கும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online