நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

தக்காளி தோசை செய்முறை | Thakkali dosai seimurai


– Advertisement –

அருமையான சுவையில் மனம் கவரும் நிறத்தில் எல்லோரும் விரும்பும் தக்காளி தோசை எப்படி சுலபமாக தயாரிப்பது என்று ஒரே மாதிரியான தோசை சுட்டு போர் அடித்து போனவர்களுக்கு வெங்காய தோசை, பொடி தோசை, முட்டை தோசை வரிசையில் தக்காளி தோசையும் ஒன்று! அருமையான சுவையில், அற்புதமான நிறத்தில் எல்லோருடைய மனதையும் கவரும் படியான இந்த தக்காளி தோசை சுவையான ரெசிபி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து காண இருக்கிறோம்.
தக்காளி தோசை செய்ய தேவையான பொருட்கள் :
தோசை மாவு – தேவையான அளவுதக்காளி – 3பெரிய வெங்காயம் – இரண்டுபூண்டு பல் – 5வரமிளகாய் – 3சீரகம் – ஒரு டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுகொத்தமல்லி – சிறிதளவுகருவேப்பிலை – ஒரு கொத்து
– Advertisement –

தக்காளி தோசை செய்முறை விளக்கம் :
தக்காளி தோசை செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தக்காளி தோசை செய்ய மூன்று பழுத்த தக்காளி பழங்களை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் இரண்டு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதனுடன் காரத்திற்கு மூன்று வர மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். ஐந்து பூண்டு பற்களைத் தோல் உரித்து போட்டுக் கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்து, இந்த கலவைக்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு, தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நைஸ் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த கலவையை நீங்கள் எடுத்து வைத்துள்ள தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.
– Advertisement –

எப்போதும் நீங்கள் தோசை ஊற்ற பயன்படுத்தும் மாவுடன் இதனை சேர்த்து கலந்துவிட்ட பின்பு கொஞ்சம் போல நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து போட்டுக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையையும் கழுவி உருவி பொடி பொடியாக நறுக்கி சேர்த்து போடுங்கள். பின்னர் நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்று வைத்து அதில் ஒரு தோசை கல்லை வையுங்கள்.
கல் காய்ந்து வந்ததும் ஒன்றரை கரண்டி மாவை எடுத்து ஊற்றி மெல்லியதாக வரும் படி நன்கு வட்டமாக பரப்பி விடுங்கள். பின்பு சுற்றிலும் நல்லெண்ணெய் அல்லது கடலெண்ணெய் ஊற்றி மிதமான தீயில் அடுப்பை வைத்து ஒருபுறம் மட்டும் நன்கு வேக விடுங்கள். மொறு மொறு என்று கிரிஸ்பியாக கீழே வெந்து எழும்பியதும், அப்படியே மடித்து தட்டில் வைத்து பரிமாற வேண்டியது தான்.
இதையும் படிக்கலாமே:7 கிரக சேர்க்கையோடு வரும் சோடசக்கலை நேரம்
சுவையான இந்த தக்காளி தோசையை இப்படி நீங்கள் சுட்டுக் கொடுத்தால் பத்து தோசை இருபது தோசை என்று எண்ணில் அடங்காமல் போய்க் கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு அருமையாக இருக்கக் கூடிய இந்த தக்காளி தோசை செய்வதும் ரொம்பவும் சுலபம் தான். கெட்டியான தேங்காய் சட்னி, காரச் சட்னி உடன் சமைத்துக் கொடுத்து பாருங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட்டு உங்களை நிச்சயம் பாராட்டுவார்கள்.

– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எழுதியவர்: Ganesh Gandhi

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்: 

YouTube | Facebook | Telegram

Scroll to Top
I am Online
I am Online