நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

பலாக்கொட்டை தோசை செய்முறை | palakottai dosai preparation in tamil

பலாக்கொட்டை தோசை செய்முறை | palakottai dosai preparation in tamil



ஏப்ரல், மே போன்ற வெயில் காலங்கள் வந்துவிட்டாலே நம் நினைவிற்கு வரக்கூடிய முக்கியமான பழ வகைகளில் ஒன்றுதான் பலாப்பழம். பலாப்பழத்தை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதற்குள் இருக்கக்கூடிய கொட்டையை பயன்படுத்தி பலவிதமான சமையல்களையும் செய்வார்கள். கிரேவி, வடை, சிப்ஸ் என்று பலவிதங்களில் செய்வார்கள். அந்த வகையில் பலாக்கொட்டையை பயன்படுத்தி தோசையும் செய்ய முடியும். பலாக்கொட்டையில் பலவிதமான சத்துக்கள் இருக்கின்றன.பலாக்கொட்டையை நாம் சாப்பிடுவதன் மூலம் வயது முதிர்ச்சியை தள்ளிப் போட முடியும், முடி உதிர்தலை நிறுத்த முடியும், கேன்சர் செல்கள் வளர்ச்சியை கட்டுக்குள் வைக்க முடியும். உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை குறைக்கும் என்று கூறிக் கொண்டே செல்லலாம். அப்படிப்பட்ட பலவிதமான மருத்துவ குணம் நிறைந்த பலாக்கொட்டையை வைத்து தோசை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். – Advertisement -தேவையான பொருட்கள்இட்லி அரிசி – 2 கப்,பலாக்கொட்டை – 25வெங்காயம் – ஒன்றுபச்சை மிளகாய் – 2இஞ்சி – 1/2 இன்ச்துருவிய தேங்காய் – 1/4 கப்,கருவேப்பிலை – 2 கொத்துஉப்பு – தேவையான அளவுசெய்முறைமுதலில் இட்லி அரிசியை எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிட்டு நல்ல தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பலாக்கொட்டையை எடுத்து அதை இடிகல்லில் போட்டு ஒன்றிரண்டாக இடித்து அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நறுக்கி அதை வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் தேங்காயையும் துருவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். – Advertisement – இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ஊற வைத்த அரிசி, இடித்த பலாக்கொட்டை, தேங்காய், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை இவை அனைத்தையும் போட்டு இதனுடன் இதற்கு தேவையான அளவு உப்பையும் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்து இந்த தோசை மாவை உடனேவும் நாம் தோசையாக ஊற்றலாம், 2 மணி நேரம் கழித்தும் தோசையாக ஊற்றலாம்.அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து கல் சூடானதும் எப்பொழுதும் தோசை ஊற்றுவது போலவே இந்த தோசையும் நாம் ஊற்றலாம். ஒருபுறம் வெந்த பிறகு அதை திருப்பி போட்டு மறுபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான பலாக்கொட்டை தோசை தயாராகிவிடும். குழந்தைகளுக்கு நெய்யை ஊற்றி இந்த தோசை சுட்டு தரும் பொழுது குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள். – Advertisement -பொதுவாக பலாக்கொட்டை வைத்து செய்யக்கூடிய பலவிதமான உணவுப் பொருட்களை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இந்த வகையில் நாம் செய்யும்பொழுது சாதாரண தோசை என்று நினைத்துக் கொண்டு அதை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் பலாக்காயில் அதிக அளவு வாயு பிரச்சனை வரும் என்பதால்தான் இந்த தோசையில் நாம் இஞ்சியை சேர்த்திருக்கிறோம். இதனால் சுகர், பிபி இருக்க கூடிய வயதானவர்களும் இந்த தோசையை சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இதையும் படிக்கலாமே:சோயா கறி ரெசிபிபலவிதமான அற்புத சத்துக்கள் நிறைந்த பலாக்கொட்டையை தூக்கி போடாமல் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இப்படி தோசையாக செய்து கொடுத்துப் பாருங்கள். பலாக்கொட்டையின் சத்துக்களை முழுமையாக பெற்று ஆரோக்கியமாக வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எழுதியவர்: Ganesh Gandhi

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்: 

YouTube | Facebook | Telegram

Scroll to Top
I am Online
I am Online