நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

பிஸ்கட் ஐஸ்கிரீம் ரெசிபி | Biscuit ice cream recipe

பிஸ்கட் ஐஸ்கிரீம் ரெசிபி | Biscuit ice cream recipe



சம்மர் சீசனுக்கு ஜில்லென்று ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று தான் வீட்டில் இருக்கும் குழந்தைகள் அடம்பிடிக்கிறார்கள் என்பவர்கள், வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்தே எப்படி டேஸ்டியான ஐஸ்கிரீம்கள் தயாரிப்பது? என்பதை தெரிந்து கொண்டால் வசதியாக இருக்கும். அந்த வகையில் பிஸ்கட் பாக்கெட்டை வைத்து எப்படி சுவையான ஜில்ஜில் சாக்லேட் ஐஸ்கிரீம் தயார் செய்வது? என்னும் சமையல் குறிப்பு தகவலை தான் இப்பதிவில் பகிர்ந்து கொள்ள போகிறோம்.சாக்லேட் பிஸ்கட் ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள் :ஃபுல் கிரீம் பால் – 1/2 லிட்டர்சாக்லேட் பிஸ்கட் – 2 பாக்கெட்சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன் – Advertisement -சாக்லேட் பிஸ்கட் ஐஸ்கிரீம் செய்முறை விளக்கம் :சாக்லேட் பிஸ்கட் ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் சாக்லேட் பிஸ்கட்கள் தேவை. எந்த பிராண்ட் பிஸ்கட் ஆக இருந்தாலும் அதை சாக்லேட் சேர்த்து செய்யப்பட்டு இருக்கும் பிஸ்கட்டாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ரெண்டு பெரிய பாக்கெட் சாக்லேட் பிஸ்கட்டுகளை முழுதாக பிரித்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அதனுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு சர்க்கரை சேர்த்து பவுடர் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் அடிகனமான பாத்திரம் ஒன்றை வையுங்கள். அதில் அரை லிட்டர் அளவிற்கு ஃபுல் கிரீம் மில்க் சேர்த்துக் கொள்ளுங்கள்.இந்த பாலில் தான் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும், ஐஸ்கிரீம் செய்வதற்கும் ஏற்றதாக இருக்கும். பால் கொதித்து கெட்டியாக துவங்கியதும், நீங்கள் தயார் செய்து வைத்துள்ள பவுடர் கலவையை சேர்த்து கிண்டி விடுங்கள். அடிப்பிடிக்கக் கூடாது எனவே கவனமாக அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து கிண்டி விடுங்கள். பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். நன்கு ஆறியதும் மீண்டும் அதே மிக்ஸர் ஜாரில் அக்கலவையை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். – Advertisement – அரைத்து எடுத்ததை ஒரு காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி அதன் மீது பாலிதீன் கவர் அல்லது ஃபாயில் பேப்பர் வைத்து இறுக்கமாக மூடி ஃப்ரீசரில் வையுங்கள். இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் அப்படியே ஃப்ரீஸ் செய்யுங்கள். பின்னர் மறுபடியும் அதனை எடுத்து மிக்ஸர் ஜாரில் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். அப்பொழுது தான் கடைகளில் கிடைக்கும் கெட்டியான டேஸ்டியான ஐஸ்கிரீம் போல நமக்கும் கிடைக்கும். மீண்டும் அரைத்ததும் இந்த கலவையை குல்பி மோல்டுகள் அல்லது குட்டி குட்டி டம்ளர்களில் ஊற்றி அதில் ஐஸ் குச்சியை சொருகி வையுங்கள். இதை அப்படியே கொண்டு போய் ஃப்ரீஸ் செய்யுங்கள்.இதையும் படிக்கலாமே:5.5.2025 இன்று பிரபஞ்ச வசிய நாள்.பொதுவாக எந்த வகையான ஐஸ்கிரீம் ஆக இருந்தாலும், எட்டிலிருந்து பத்து மணி நேரம் வரை அது கெட்டியாக மாறுவதற்கு நேரம் எடுக்கும். எனவே ஒரு இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். அதன் பிறகு மறுநாள் நீங்கள் ஜில் ஜில் என்று குளிர குளிர சுவையான சாக்லேட் ஐஸ்கிரீமை ரசித்து சாப்பிடலாம். பிஸ்கட் பாக்கெட்டை வைத்து தான் செய்தார்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது, அவ்வளவு சுவையாக இருக்கும். நீங்களும் உங்க வீட்டில் ட்ரை பண்ணி குட்டீஸ்களுக்கு கொடுத்து அசத்துங்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online