நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

பீட்ரூட் சாமை முறுக்கு செய்முறை | beetroot samai murukku preparation in tamil

பீட்ரூட் சாமை முறுக்கு செய்முறை | beetroot samai murukku preparation in tamil



விடுமுறை நாட்களில் இருக்கக்கூடிய குழந்தைகள் அதிகப்படியாக உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக நொறுக்கு தீனிகளை தான் சாப்பிடுவார்கள். அப்படி நொறுக்கு தீனிகளை சாப்பிடும் பொழுது அது ஆரோக்கியமான நொறுக்குத் தீணியாக இருந்தால் அதனால் அவர்களின் உடல் ஆரோக்கியமாக மாறும். அதற்காகவே கடைகளிலிருந்து நொறுக்கு தீனி வாங்காமல் வீட்டிலேயே ஆரோக்கியமான ஒரு சுவையான முறுக்கு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.தேவையான பொருட்கள்சாமை அரிசி மாவு – ஒரு கப்உளுந்து மாவு – 3/4 கப்,பீட்ரூட் – 1உப்பு – தேவையான அளவுசீரகம் – 1/4 ஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்வெண்ணெய் – ஒரு ஸ்பூன்எண்ணெய் – பொறிப்பதற்கு தேவையான அளவு – Advertisement -செய்முறைமுதலில் சாமை அரிசியை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து தண்ணீரை முற்றிலுமாக வடித்து விட்டு வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். காய வைத்த சாமை அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு மாவாக அரைத்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்ததாக உளுந்து மாவு தயார் செய்வதற்கு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் உளுந்தை சேர்த்து வறுக்க வேண்டும். உளுந்தின் நிறம் மாறக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. உளுந்து வறுப்பட்ட பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு மாவாக அரைத்து அதையும் சலித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் அரைக்கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்து அதன் சாரை மட்டும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். – Advertisement – இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சாமை அரிசி மாவு, உளுந்து மாவு, சீரகம், உப்பு, பெருங்காயத்தூள் போன்றவற்றை போட்டு ஒருமுறை நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் பீட்ரூட் சாறு சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக முறுக்கு மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ளுங்கள். கடைசியாக ஒரு ஸ்பூன் அளவிற்கு வெண்ணெயையும் சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ளுங்கள்.இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து முறுக்கு பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும். முறுக்கு பிழிவதற்கு முறுக்கு அச்சு எடுத்து அதில் நாம் பிணைந்து வைத்திருக்கும் மாவை போட்டு எண்ணெய் காய்ந்ததும் நேரடியாக எண்ணெயிலேயே முறுக்கு பிழிந்து விடலாம். ஒருவேளை அப்படி பிழிய தெரியாது என்பவர்கள் கரண்டியை குப்புற கவுத்தி அதில் முறுக்கை பிழிந்து அதை எடுத்து எண்ணெயில் போட்டு விடலாம். ஒரு பக்கம் முறுக்கு வெந்த பிறகு அதை திருப்பி போட்டு மறுபக்கமும் வேகவைத்து எடுத்து விட வேண்டும். மிகவும் சுவையான அதேசமயம் ஆரோக்கியம் மிகுந்த பீட்ரூட் சாமை முறுக்கு தயாராகி விட்டது.இதையும் படிக்கலாமே:கேபேஜ் வடை செய்முறைகடைகளில் இருந்து நொறுக்கு தீனி வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலேயே இப்படி ஆரோக்கியமான சத்து மிகுந்த நொறுக்கு தீனியை செய்து கொடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணி காப்போம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எழுதியவர்: Ganesh Gandhi

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்: 

YouTube | Facebook | Telegram

Scroll to Top
I am Online
I am Online