நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

பொடி பாவக்காய் தொக்கு | Podi pavakkai thokku

பொடி பாவக்காய் தொக்கு | Podi pavakkai thokku



முற்றிய பாகற்காயை சமைத்து சாப்பிடுவதற்கு எல்லோருக்கும் பிடிப்பதில்லை, ஏனென்றால் அதன் கசப்புத்தன்மை அவ்வளவு இருக்கிறது. கசப்பே மருந்து என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். கசப்புள்ள இந்த காய்கறியில் தான் ஏராளமான சத்துக்களும் உள்ளன. இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனிசு, நார்ச்சத்து, மெக்னீசியம், விட்டமின் ஏ, விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.முற்றியதை காட்டிலும், பொடி பொடியாக விற்கப்படும் பொடி பாகற்காயை வாங்கிக் கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள சமையல் குறிப்பு படி அதனை சமைத்து பாருங்கள். குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இனி அடிக்கடி பாகற்காயை இந்த முறையில் உங்கள் உணவில் சேர்த்து நன்மைகளை பெறலாமே! – Advertisement -பொடி பாகற்காய் தொக்கு செய்ய தேவையான பொருட்கள் :பொடி பாகற்காய் – கால் கிலோபெரிய வெங்காயம் – மூன்றுதக்காளி – மூன்றுசமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்கடுகு – அரை ஸ்பூன்சீரகம் – அரை ஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துகுழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்புளி – சிறு நெல்லிக்காய் அளவுவெல்லம் – சிறு துண்டுபொடி பாகற்காய் தொக்கு செய்முறை விளக்கம் :பொடி பாகற்காயை சமைக்கும் பொழுது அதில் இருக்கும் விதைகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. பொடி பொடியாக இருக்கக்கூடிய இந்த பாகற்காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து, அதன் காம்பு பகுதிகளை நீக்கிவிட்டு, மெல்லியதாக வட்ட வட்ட வடிவங்களில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் சேர்த்து காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் சீரகம் சேர்த்து தாளித்து, ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி போடுங்கள். – Advertisement – பின்னர் மூன்று பெரிய வெங்காயங்களை தோல் நீக்கி சுத்தம் செய்து, பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளையும் சேர்த்து வதக்குங்கள். சிறிதளவு உப்பு போட்டு வதக்குங்கள், சீக்கிரம் வதங்கும். மசிய இவை வதங்கி வந்ததும், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசம் போக நன்கு பிரட்டி விடுங்கள். மசாலா வாசம் போனதும், வெட்டி வைத்துள்ள பாகற்காய் துண்டுகளையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டுங்கள். தண்ணீர் எதுவும் சேர்க்காமல், மூடி வைத்து வேக விடுங்கள்.இதையும் படிக்கலாமே:நாளை 20-05-2025 தேய்பிறை அஷ்டமி திதி வழிபாடுபொடி பாகற்காய் என்பதால் சீக்கிரம் வெந்துவிடும். இடையிடையே மூடியை திறந்து கிண்டி விடுங்கள். பாதி அளவிற்கு வெந்து வந்ததும், சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை கரைத்து கால் கப் அளவிற்கு புளி தண்ணீரை சேர்க்க வேண்டும். பின்னர் நீர் வற்றி நன்கு வெந்ததும், ஒரு சிறு துண்டு வெல்லத்தை சேர்த்து, ஒரு கிளறு கிளறுங்கள். நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி சாம்பார் சாதம், ரசம், கலவை சாதங்களுடன் தொட்டு சாப்பிட்டு பாருங்கள், சுவை அட்டகாசமாக இருக்கும். காலையில் கஞ்சிக்கு கூட இந்த தொக்கு, நல்ல ருசியை தரும், ட்ரை பண்ணி பாருங்க.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online