நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

ப்ரோக்கோலி அடை செய்முறை | Broccoli adai semurai in Tamil

ப்ரோக்கோலி அடை செய்முறை | Broccoli adai semurai in Tamil


– Advertisement –

பச்சை காய்கறிகளை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படி நாம் சேர்க்கக்கூடிய பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒரு பொருளாக திகழ்வதுதான் ப்ரோக்கோலி. இதை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும், எலும்புகள் வலுப்பெறும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், கண்பார்வை தெளிவடையும் என்று பலவிதமான நன்மைகள் இருக்கின்றன. இதை எப்படி செய்தால் வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று யோசிக்கவே வேண்டாம். இப்படி ஒரு முறை காலை உணவாக ப்ரோக்கோலியை வைத்து அடை செய்து கொடுத்துப் பாருங்கள். வீட்டில் யாரும் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள். அந்த ப்ரோக்கோலி அடையை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
– Advertisement –

ப்ரோக்கோலி – ஒன்றுஓட்ஸ் – 1/4 கப்கடலை மாவு – 1/4 கப்முட்டை – 2மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவு
செய்முறை
– Advertisement –

முதலில் ஒரு ப்ரோக்கோலியை எடுத்து அதில் பாதியை மட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அடுப்பை பற்றவைத்து ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி தண்ணீரை கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சிறிதளவு கல் உப்பை சேர்த்து நாம் நறுக்கி வைத்திருக்கும் ப்ரோக்கோலியை அதில் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வேக விட வேண்டும். இரண்டு நிமிடம் ஆன பிறகு அடுப்பில் இருந்து இறக்கி இந்த ப்ரோக்கோலி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
இது ஆரிய பிறகு கேரட் துருவுவது போல் துருவலாம். அல்லது மிக்ஸி ஜாரில் தண்ணீர் இல்லாமல் சேர்த்து ஒருமுறை மட்டும் ஒட்டி எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது துருவிய இந்த ப்ரோக்கோலி ஒரு கப் அளவு இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு கப் அளவு துருவிய ப்ரோக்கோலியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஓட்ஸ், கடலை மாவு, முட்டை, மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு போன்றவற்றை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாக அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.
– Advertisement –

இப்பொழுது அடுப்பில் ஒரு பேனை வைத்துக் கொள்ளுங்கள். பேன் நன்றாக சூடானதும் அதில் எண்ணெயை தடவிக் கொள்ளுங்கள். பிறகு இந்த அடை மாவை ஒரு கரண்டியால் எடுத்து சிறு சிறு அடைகளாக ஊற்ற வேண்டும். பிறகு இதை சுற்றி எண்ணெய் ஊற்றி ஒரு புறம் இது நன்றாக வெந்த பிறகு, அதை திருப்பி போட்டு மறுபுறமும் வேகவைத்து எடுத்து வைத்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான ப்ரோக்கோலி ஆடை தயாராகிவிட்டது. குழந்தைகளுக்கு சிறு சிறு அடையாக சுட்டு தருவது போல் பெரியவர்களுக்கு பெரிய அடையாக சுட்டு தரலாம். மிகவும் சுவையாகவும் அதேசமயம் ஆரோக்கியமாகவும் இருக்கும். உடல் எடை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த அடையை சாப்பிட்டு உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.
இதையும் படிக்கலாமே: கஸ்டர்ட் பிரெட் ரெசிபி
சட் என்று வேகமாக ஆரோக்கியமான ப்ரோக்கோலியை வைத்து இப்படி ஒரு காலை உணவை தயார் செய்து கொடுக்க அன்றைய நாள் முழுவதும் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online