நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

மாங்காய் ஊறுகாய் ரெசிபி | Mangai pickle recipe

மாங்காய் ஊறுகாய் ரெசிபி | Mangai pickle recipe


– Advertisement –

சம்மர் சீசன் வந்து விட்டாலே, மாங்காய் கொத்து கொத்தாக மரத்தில் காய்த்து தொங்க ஆரம்பித்து விடும். சுவையான இனிப்புள்ள நல்ல ரகம் உள்ள மாங்காயாக கிடைத்தால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு மாங்காய் இருந்தால் போதும், சூப்பரான சுவையான ஊறுகாய் நம் வீட்டிலேயே கொஞ்சம் பொருட்களை பயன்படுத்தி தயாரித்து வைத்து விடலாம். எதுவும் இல்லாமல் சுடுசோரில் பிசைந்து சாப்பிட்டாலே, இது அவ்வளவு ருசிக்கும். இந்த மாங்காய் ஊறுகாய் எப்படி தயாரிக்க போகிறோம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவை நோக்கி பயணிப்போம்.
மாங்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள் :
பெரிய இனிப்பு மாங்காய் – இரண்டுகாஷ்மீரி மிளகாய் தூள் – மூன்று டேபிள் ஸ்பூன்கடுகு – ஒரு டேபிள் ஸ்பூன்வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுதாளிக்க :நல்லெண்ணெய் – கால் கப்கடுகு – ஒரு டீஸ்பூன்வரமிளகாய் – 10பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துவெல்லம் – சிறு துண்டு
– Advertisement –

மாங்காய் ஊறுகாய் செய்முறை விளக்கம் :
இந்த மாங்காய் ஊறுகாய் செய்வதற்கு தேவையான ரெண்டு இனிப்புள்ள நல்ல மாங்காய்களை தேர்ந்தெடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து, அதன் தோலை சீவி எடுத்து விடுங்கள். பின்பு தேங்காய் துருவியில் போட்டு மெல்லியதாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் சிறு சிறு துண்டுகளாக நீங்கள் நறுக்கியும் வைத்துக் கொள்ளலாம், உங்கள் விருப்பம் தான். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக வையுங்கள்.
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொண்டு பொரிய வறுத்துக் கொள்ளுங்கள். வெந்தயத்தின் நிறம் அதிகம் மாறக்கூடாது. பின்பு ஆறியதும் அதனை நைசாக பவுடர் போல மிக்ஸர் ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

இப்போது துருவி வைத்துள்ள மாங்காயுடன் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். சாதாரண மிளகாய் தூள் ரொம்ப காரத்தை கொடுக்கும். காஷ்மீரி மிளகாய் தூள் நல்ல நிறமும், மிதமான காரத்தையும் கொடுக்கும் என்பதால் இதனை சேர்ப்பது தான் ஊறுகாய்க்கு நல்லது. பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள கடுகு, வெந்தய பொடியையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு ஒன்றுடன் ஒன்று கலந்து விடும்படி கரண்டியால் கை படாமல் கலந்து வையுங்கள்.
இதையும் படிக்கலாமே:தலையெழுத்து மாற முருகன் மந்திரம்
இப்போது அதே வாணலியில் கால் கப் அளவிற்கு சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும், ஒரு கொத்து கறிவேப்பிலை, 10 வரமிளகாய்களை காம்புகள் நீக்கி சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் கால் டீஸ்பூன் அளவிற்கு பெருங்காயத்தூள் சேர்த்து கலந்துவிட்டு, நீங்கள் தயார் செய்து வைத்துள்ள மாங்காயையும் சேர்த்து ரெண்டு நிமிடம் மட்டும் பிரட்டி விடுங்கள். அவ்வளவுதான், சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி! இவை நன்கு ஆறியதும் ஈரம் இல்லாத பீங்கான் ஜாடி அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வையுங்கள். கடையில் வாங்குவதைவிட ரொம்பவே ருசியாக இருக்கும், இந்த மாங்காய் ஊறுகாயை, நீங்களும் ட்ரை பண்ண மறக்காதீங்க!

– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online