நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

ரவை அல்வா செய்முறை | rava halwa preparation in tamil

ரவை அல்வா செய்முறை | rava halwa preparation in tamil


– Advertisement –

வீட்டில் ஏதாவது விசேஷம் என்றாலோ சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றாலோ உடனே ஏதாவது ஒரு இனிப்பு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அவ்வாறு சொல்லிய உடன் நம் நினைவிற்கு வரக்கூடியது மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய ரவையை வைத்து செய்யக்கூடிய கேசரிதான். அதே ரவையை வைத்து எளிமையான முறையில் அல்வாவும் செய்ய முடியும். அப்படி ஒரு முறை செய்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் யாருமே இதை ரவை வைத்து தான் செய்தீர்கள் என்று நம்பவே மாட்டார்கள். அந்த அளவிற்கு கடையில் கிடைக்கும் அல்வா போல் சுவையாக இருக்கும். நாவில் எச்சில் ஊறும் ரவை அல்வாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நம் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
ரவை – ஒரு கப்சர்க்கரை அல்லது வெல்லம் – 1 1/2 கப்ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்நெய் – 1/4 கப்முந்திரி – ஒரு கைப்பிடி அளவு
– Advertisement –

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வறுக்காத ஒரு கப் ரவையை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கைகளால் அந்த ரவையை நன்றாக பிணைந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். 2 மணி நேரம் கழித்து பார்க்கும் பொழுது அந்த ரவை நன்றாக ஊறி இருக்கும். இப்பொழுது சப்பாத்திக்கு மாவு எப்படி பிணைவோம்? அப்படி இந்த ரவையை நாம் பிணைய வேண்டும்.
நம்மால் முடிந்த அளவிற்கு நன்றாக பிணையப் பிணைய ரவையிலிருந்து பால் பிரிய ஆரம்பிக்கும். நன்றாக பிணைந்த பிறகு மேலும் இதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மறுபடியும் பிணைந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு வடிகட்டியை வைத்து அதற்கு மேல் ஒரு மெல்லிய துணியை விரித்து அதில் ஊற்றி ரவை பாலை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் எந்த பாத்திரத்தில் அல்வா செய்யப் போகிறோமோ அந்த பாத்திரத்தில் சிறிதளவு மட்டும் நெய் ஊற்றி நன்றாக பாத்திரம் முழுவதும் தடவி விட்டு பிறகு அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

இப்பொழுது அதில் நாம் எடுத்து வைத்திருந்த ரவை பாலை ஊற்ற வேண்டும். இது மூன்று கப் அளவிற்கு வரும். இதை கைவிடாமல் நன்றாக கலக்க ஆரம்பிக்க வேண்டும். இது சற்று கெட்டியானதும் இதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து கைவிடாமல் கிண்டி கொண்டே இருக்க வேண்டும். நன்றாக கெட்டியான பதத்திற்கு வந்த பிறகு இதில் அரை ஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் தூளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரையும் ஊற்றி அல்வாவின் நிறத்திற்காக கேரமல் தயார் செய்ய வேண்டும். சற்று அதிகப்படியான தீயில் இதை கைவிடாமல் கிண்டி நமக்கு எந்த நிறத்தில் அல்வா வேண்டுமோ அந்த நிறத்திற்கு வந்ததும் அதை அப்படியே எடுத்து அடுப்பில் இருக்கக் கூடிய அல்வாவில் ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். இப்பொழுது அல்வாவிற்கு நிறமும் கிடைத்துவிட்டது.
– Advertisement –

இந்த நேரத்தில் நாம் எடுத்து வைத்திருக்கும் நெய்யிலிருந்து பாதி அளவு நெய்யை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். கைவிடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்வரை இதை கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். உடைத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பையும் ஒரு கைப்பிடி அளவு அதில் போட்டு நன்றாக கிண்டி கொண்டே இருங்கள்.
எப்பொழுது அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வருகிறதோ அப்பொழுது மீதம் இருக்கக்கூடிய நெயையும் ஊற்றி நன்றாக கலந்து அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். இந்த அல்வாவை ஆற வைத்து சாப்பிடும் பொழுது தான் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். நெய் அதிகளவில் உபயோகப்படுத்துபவர்கள் இன்னும் கூட நெய் சேர்த்துக் கொள்ளலாம். விருப்பம் இருப்பவர்கள் இதனுடன் பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளையும் சேர்த்து அல்வா தயார் செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:பாலக்கீரை உள்ளி காரம் ரெசிபி
வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருட்களை வைத்தே கடையில் கிடைக்கக்கூடிய அளவிற்கு சுவையான அல்வாவை தயார் செய்ய முடியும் ஒரு முறை கேசரிக்கு பதிலாக ரவை அல்வா செய்து கொடுத்துப் பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஆகா ஓகோ என்று புகழ ஆரம்பித்து விடுவார்கள்.

– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online