நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

ராம நவமி ஸ்பெஷல் கோசம்பரி செய்யும் முறை

ராம நவமி ஸ்பெஷல் கோசம்பரி செய்யும் முறை






– Advertisement –

நாம் கொண்டாடக்கூடிய ஒவ்வொரு விழாவிற்கும் சிறப்பு மிகுந்த சில பிரசாதங்கள் இருக்கும். அந்த பிரசாதங்களை செய்து வைத்து வழிபாடு செய்வதன் மூலம் அந்த தெய்வத்தின் பரிபூரணமான அருளை பெற முடியும். அந்த வகையில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ராமநவமி. அன்றைய தினத்தில் ராமபிரானுக்கு பிடித்தமான பொருட்களை நெய்வேத்தியமாக செய்து வைத்து வழிபாடு செய்யும்பொழுது ராமபிரானின் அருளை பரிபூரணமாக தர முடியும். அப்படி ராமநவமி அன்று செய்யவேண்டிய ஒரு முக்கியமான நெய்வேத்தியம் தான் கோசம்பரி. இந்த கோசம்பரியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – ஒரு கப்நறுக்கிய தேங்காய் – 1/4 கப்நறுக்கிய மாங்காய் – 1/4 கப்நறுக்கிய வெள்ளரிக்காய் – 1/4 கப்பச்சை மிளகாய் – ஒன்றுகொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவுஎலுமிச்சம் பழம் – 1/2 பழம்உப்பு – தேவையான அளவு
– Advertisement –

செய்முறை
முதலில் பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். அந்த தண்ணீரை முற்றிலும் நீக்கிய பிறகு நல்ல தண்ணீரை ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக வெள்ளரிக்காய், தேங்காய், மாங்காய் இவை மூன்றையும் ஒரே அளவு படி நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை மிகவும் மெல்லியதாக குறுகிய வடிவத்தில் நறுக்கிக் கொள்ளுங்கள். இதே போல் கொத்தமல்லி தலையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒருவேளை ஒரே அளவில் இதை மூன்றையும் நறுக்க இயலவில்லை என்னும் பட்சத்தில் கேரட் உரசுவது போல் உரசியும் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது பாசிப்பருப்பு அரைமணி நேரம் ஊறிய பிறகு அதில் இருக்கக்கூடிய தண்ணீரை முற்றிலுமாக நீக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில் பாசிப்பருப்பை போட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் அனைத்து பொருட்களையும் போட வேண்டும். பிறகு இதற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு நன்றாக கலக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான கோசம்பரி தயாராகிவிட்டது.
– Advertisement –

இந்த கோசம்பரியை ராமபிரானுக்கு நெய்வேத்தியமாக வைப்பதோடு நீர் மோர், பானகம், துளசி தீர்த்தம் போன்றவற்றையும் சேர்த்து வைத்து வழிபாடு செய்தோம் என்றால் ராமபிரானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். ராமநவமி அன்று அடுப்பில் வைத்து சமைக்காமல் இந்த முறையில் கோசம்பரி நீர் மோர் மற்றும் பாணகத்தை தயார் செய்து வைத்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. இந்த முறையில் நாம் தயார் செய்த இந்த நெய்வேத்தியங்களை வீட்டில் இருப்பவர்களுக்கு தருவதோடு மட்டுமல்லாமல் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு தருவதன் மூலம் புண்ணியம் அதிகளவில் சேர்த்துக் கொள்ள முடியும்.
இதையும் படிக்கலாமே:சாம்பார் பொடி தக்காளி சட்னி
விரதம் இருந்து வழிபாடு செய்கிறோமோ இல்லையோ முழு மனதோடு நாம் வழிபடக்கூடிய தெய்வத்திற்கு பிடித்தமான பொருட்களை செய்து வைத்து வழிபாடு செய்தாலே தெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அந்த வகையில் ராம நவமி அன்று ராமபிரானுக்கு பிடித்தமான கோசம்பரியை இப்படி செய்து வைக்க ராமப்பிரானின் அருளையும் பெற முடியும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.

– Advertisement –








Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online