நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

ரோஸ் பிஸ்தா தேங்காய் பர்பி | Rose pista coconut burfi

ரோஸ் பிஸ்தா தேங்காய் பர்பி | Rose pista coconut burfi



வித்தியாசமான முறையில் ரிச் டேஸ்ட் கொடுக்கக்கூடிய, ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி இது! ரோஸ் எசென்ஸ் சேர்த்து, அருமையான தேங்காய் பிஸ்தா பர்பி எப்படி தயார் செய்வது? பிங்க் நிறத்தில் பார்ப்பதற்கு குழந்தைகள் விரும்பும் வகையில் இருக்கக்கூடிய, இந்த பிஸ்தா ரோஸ் தேங்காய் பர்பி செய்முறையை தான் தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவில் அறிந்து கொள்ள இருக்கிறோம்.பிஸ்தா ரோஸ் தேங்காய் பர்பி செய்ய தேவையான பொருட்கள் :தேங்காய் துருவியது – 2 கப்கன்டென்ஸ்டு மில்க் – 1 கப்ரோஸ் எஸன்ஸ் – 1/2 டீஸ்பூன்பிஸ்தா – 2 மேசைக்கரண்டி (நறுக்கி வைக்கவும்)நெய் – 2 மேசைக்கரண்டிஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்பிங்க் ஃபுட் கலர் – சில சொட்டுகள் – Advertisement -பிஸ்தா ரோஸ் தேங்காய் பர்பி செய்முறை விளக்கம் :முதலில் இந்த ரோஸ் பிஸ்தா கோக்கனட் பர்பி செய்ய தேவையான எல்லா பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி காய விடுங்கள். நெய் காய்ந்ததும் அதில் துருவி வைத்துள்ள தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வாசனை வரும் வரை சிறிது நேரம் கிளறவும். பின்னர் அதில் கன்டென்ஸ்டு மில்க் ஒரு கப் அளவிற்கு சேர்க்கவும். தொடர்ந்து கிளறி, கலவை இறுகி கனமாகும் வரை வேக வைக்கவும்.இப்போது ரோஸ் எஸன்ஸ் சேர்த்து கலந்து விடுங்கள். பின் ஏலக்காய் தூள் மற்றும் பிஸ்தா தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கிளறவும். கலவை வாணலியில் ஒட்டாமல் இருக்க வேண்டும். கெட்டியாகும் சமயத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள். பின் அதை ஒரு நெய் தடவிய ஒரு பிளேட்டில் மாற்றவும். மேலே சற்று நறுக்கி வைத்துள்ள பிஸ்தா தூவி, மெதுவாக தட்டி ஒட்ட வைக்கவும். முழுமையாக குளிர்ந்ததும், உரிய பிடித்தமான வடிவத்தில் நறுக்கி பரிமாறவும். – Advertisement – இதில் தனியாக சக்கரை சேர்க்க தேவையில்லை; கன்டென்ஸ்டு மில்க் போதுமானது. பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில், மேலே பிஸ்தா பருப்புகளை தூவி, ரிச் ஆன லுக் கிடைக்கும். சுவைத்து சாப்பிடுவதற்கும் அருமையாக இருக்கும். சாதாரண தேங்காயை வைத்து பாரம்பரியமான முறையில் செய்வது போலவே, இந்த தேங்காய் பர்பியையும் செய்கிறோம். ஆனால் இதில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு சில பொருட்களால் இதன் சுவையும், தரமும் மாறுபடுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசித்து ருசித்து சாப்பிடக்கூடிய இந்த ரோஸ் தேங்காய் பிஸ்தா பர்பி, இதே முறையில் நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க, நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.இதையும் படிக்கலாமே:வைகாசி வளர்பிறை வெள்ளிக்கிழமை வழிபாடுதேங்காயில் இருக்கும் நற்குணங்கள், இதன் மூலமாக குழந்தைகளுக்கு கிடைக்கும். இந்த ஸ்வீட் வகையை செய்து ஓரிரு நாட்கள் மட்டும் வைத்திருந்தால் போதுமானது. அதிக நாட்கள் வைத்திருக்கக் கூடாது, எனவே செய்யும் பொழுதே கொஞ்சமாக செய்து சாப்பிடுங்கள். பத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்குள் செய்யக்கூடிய, இந்த ரிச் டேஸ்ட் கோகனட் ஸ்வீட் ரெசிபியை நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online