– Advertisement –
நாம் அனைவருமே சிறுவயதில் நம்முடைய வயதை அதிகப்படுத்தி சொல்ல ஆசைப்படுவோம். அதே சிறிது வயதான பிறகு நம்முடைய வயதை அப்படியே குறைக்க ஆரம்பிப்போம். அதேபோல் யாராவது ஆன்ட்டி அங்கிள் என்று கூப்பிட்டு விட்டால் அதை ஒரு பெரிய அவமானமாக கருதும் நபர்களும் பலர் இருக்கிறார்கள். இப்படி வயதாகாமல் இளமையாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கற்றாழை எந்த வகையில் உதவி செய்கிறது என்று தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கற்றாழையை நம்முடைய முன்னோர்கள் குமரி என்று கூறினார்கள். காரணம் இந்த கற்றாழையை நாம் முறையாக எடுத்துக் கொள்ளும் பொழுது என்றுமே இளமையாக திகழ முடியும் என்பதுதான். ஆம் கற்றாழையை நாம் உட்கொள்ளும் பொழுது அதில் இருக்கக்கூடிய சத்துக்களால் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கெட்ட கொழுப்புகள் நீங்கும்.
– Advertisement –
உடல் எடை குறையும். உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உடலுக்குள் இருக்கக்கூடிய வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் போன்றவை அனைத்தும் சரியாகும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். இப்படி நம் உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற கழிவுகள் அனைத்தையும் நீக்குவதற்கு கற்றாழை உதவி புரிகிறது என்பதால் கற்றாழையை நாம் உட்கொள்வதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியமாக திகழும்.
அடுத்ததாக நம் இளமையாக இருக்க வேண்டும் என்றால் நம்முடைய முகம் இளமையாக இருக்க வேண்டும். நம்முடைய முகத்திற்கு கற்றாழையை நாம் தினமும் பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்கள் நீங்குவதற்கு கற்றாழையில் இருக்கக்கூடிய சத்துக்கள் உதவுகிறது. தினமும் நாம் ஒரு சிறிய கேற்று கற்றாழையை எடுத்து முகத்தில் நன்றாக தடவி மசாஜ் செய்வதன் மூலம் முகச்சுருக்கம் நீங்கும், பருக்களும், கரும்புள்ளிகளும் ஏற்படாமல் இருக்கும்.
– Advertisement –
அடுத்ததாக இளமை தோற்றத்தை உணர்த்தக்கூடியதாக திகழ்வது தலைமுடி. நம்முடைய தலைமுடிக்கு நாம் கற்றாழையை உபயோகப்படுத்துவதன் மூலம் உடல் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய முடி உதிர்தல் என்பது முற்றிலும் நின்றுவிடும். மேலும் பொடுகு பிரச்சனை எதுவும் வராது. பொடுகு பிரச்சனை இல்லை என்றாலேயே நம்முடைய தலைமுடி உதிர்தல் என்பது நின்றுவிடும்.
இதோடு மட்டுமல்லாமல் நரை என்று சொல்லக்கூடிய வெள்ளை முடிகள் வருவதை கற்றாழை தடுக்கிறது. தொடர்ச்சியாக வாராவாரம் கற்றாழையை நம்முடைய தலைமுடியில் தடவி அரை மணி நேரம் வைத்திருந்து குளிப்பதன் மூலம் தலைமுடியில் இருக்கக்கூடிய அனைத்து வகையான பிரச்சனைகளும் நீங்கி தலைமுடி நன்றாக அடர்த்தியாக கருமையாக வளர ஆரம்பிக்கும்.
– Advertisement –
முக்கிய குறிப்பு: பொதுவாக கற்றாழையை நாம் பயன்படுத்துவதற்கு முன்பாக கற்றாழை கீற்றை நறுக்கி அரை மணி நேரமாவது அப்படியே வைத்திருக்க வேண்டும். அதில் இருக்கக்கூடிய மஞ்சள் திரவம் முழுவதும் வெளியேறிய பிறகு மேலிருக்கும் தோலை சீவி விட்டு உள்ளிருக்கும் சதையை குறைந்தபட்சம் ஒன்பது முறையாவது அலசிவிட்டு தான் உபயோகப்படுத்த வேண்டும்.
இந்த முறையை நாம் சாப்பிடுவதற்கு மட்டும் உபயோகப்படுத்தாமல் நம்முடைய முகம், தலை முடி என்று அனைத்திற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் சைனஸ் பிரச்சினை இருப்பவர்களும் சீத்தல உடம்பு காரர்களும் இந்த கற்றாழையை பயன்படுத்தும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
இதையும் படிக்கலாமே: முடி உதிர்வை தடுக்கும் பானம்
நம்முடைய உடலுக்கும் முகத்திற்கும் முடிக்கும் ஆரோக்கியத்தை தரக்கூடிய கற்றாழையை நாமும் முறையாக பயன்படுத்தினோம் என்றால் என்றுமே நம்மால் இளமையாக இருக்க முடியும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam