ஏபிசி ஜூஸ் செய்வது எப்படி | ABC juice for skin whitening in Tamil

ஏபிசி ஜூஸ் செய்வது எப்படி | ABC juice for skin whitening in Tamil

Qries

– Advertisement –

உடல் எடை குறைப்பது முதல் முகம் தங்கம் போல தகதகன்னு மின்னுவது வரை எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு நல்ல பலன்களை அளிக்கக்கூடிய இந்த ஜூஸுக்கு இன்று தனி மவுசு தான்! காலை உணவிற்கு பதிலாக இந்த ஜூஸை எடுத்துக் கொண்டாலே தேவையான மொத்த சத்தும் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அப்படியான இந்த ஜூஸ் என்ன ஜூஸ்? இதை எப்படி தயாரித்து பருகுவது? என்பதைத்தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
உடலுக்கு பல்வேறு நல்ல சத்துக்களை அளிக்கக்கூடிய முக்கியமான மூன்று பொருட்களை உள்ளடக்கிய இந்த ஜூஸுக்கு ‘ஏபிசி ஜூஸ்’ என்கிற பெயர் உண்டு. ஏ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பீட்ரூட், சி ஃபார் கேரட் என்பதைத்தான் இந்த ஏ பி சி குறிக்கிறது. இது புற்றுநோய், இதய நோய், முகப்பொலிவு, எடை குறைப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக காலை உணவிற்கு பதிலாக எடுத்துக் கொள்கின்றனர்.
– Advertisement –

காலையில் வெறும் வயிற்றில் எழுந்ததும் இந்த ஜூஸை பருகலாம் அல்லது மதிய நேர உணவிற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் இதை எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்றும், மேலும் பல்வேறு நன்மைகளை உடலுக்கு அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏ பி சி ஜூஸ் தயாரிக்கும் முறை:ஒரு முழு ஆப்பிளை தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு சிறு பீட்ரூட்டை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி சேருங்கள். பின்னர் பெரிய கேரட் ஒன்றை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி சேருங்கள். இதனுடன் ஒரு சிறு எலுமிச்சை பழத்தை பிழிந்து ஜூஸ் போல நைசாக அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
– Advertisement –

இதை நேரடியாக அப்படியே பருகுவதை காட்டிலும் ஒரு பின்ச் உப்பு, சிறிதளவு மிளகுத்தூள் தூவி பருகும் பொழுது தொண்டைக்கு இதமாகவும், சுவை அதிகமாகவும் இருக்கும். ஆப்பிள் பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவற்றில் ஏராளமான நுண்ணுயிர் சத்துக்கள் உள்ளன. இதை எளிய முறையில் இந்த வகையில் ஜூஸ் போட்டு குடித்தால் முகம் தங்கம் போல தகதகன்னு மின்னும். சருமம் சார்ந்த எத்தகைய பிரச்சனைகளும் அண்டாது. முக சுருக்கங்கள் குறைந்து முகத்தை 10 வயது குறைந்தது போல இளமையான தோற்றத்தை கொடுக்கும். மேலும் முகத்தில் தோன்றக்கூடிய கருவளையம், முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றையும் முற்றிலும் விரட்டி அடிக்கும்.
இதையும் படிக்கலாமே: 1 கைப்பிடி முருங்கைக் கீரை இருந்தால் போதும் இனி ஒரு நோயும் உங்களை நெருங்கவே நெருங்காது
இதில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள், செரிமான பிரச்சனைகள், அல்சர், மாரடைப்பு போன்றவற்றிலிருந்தும் பாதுகாப்பாக வைக்கிறது. இதில் துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. மேலும் இரும்புச்சத்து, விட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி9, சி, ஈ, கே போன்றவையும் காணப்படுகிறது. கெட்ட கொழுப்பை நீக்கி, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், பார்வை திறன் அதிகரிக்கவும், மூளை செயல்பாடு சிறப்பாக இருக்கவும், அலர்ஜி பிரச்சனைகள் நீங்கவும், வாயு பிரச்சனை தீரவும் இந்த ஜூஸ் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top