நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

கை நிறைய பணம் சேர கிருத்திகை வழிபாடு

கை நிறைய பணம் சேர கிருத்திகை வழிபாடு



பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கைநிறைய பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். யாருமே சிறிதளவு மட்டும் சம்பாதித்தால் போதும் என்று நினைக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு கை நிறைய பணத்தை சம்பாரிக்க ஆசைப்படுபவர்கள் அதற்குரிய முயற்சிகளை செய்வதோடு முருகப்பெருமானின் இந்த ஒரு மந்திரத்தையும் சேர்த்து கூறினால் போதும். அதுவும் அமாவாசையும் கிருத்திகை நட்சத்திரம் சேர்ந்து வரக்கூடிய இன்று இரவு 12 மணிக்குள் இந்த ஒரு மந்திரத்தை கூற வேண்டும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.பணம் சேர கிருத்திகை வழிபாடுசந்திர பகவான் சம்பந்தப்பட்ட எந்த ஒரு நாளாக இருந்தாலும் அந்த நாளில் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டோம் என்றால் அதற்குரிய பலனை நம்மால் விரைவிலேயே பெற முடியும். அந்த வகையில் இன்று திங்கட்கிழமை. இது சந்திர பகவானுக்குரிய கிழமை. அதோடு இன்றைய தினம் அமாவாசை. இதுவும் சந்திர பகவானுக்குரிய தினமாகவே கருதப்படுகிறது. இதோடு கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. கிருத்திகை நட்சத்திரம் என்பது முருகப் பெருமானுக்குரிய நட்சத்திரம் என்று நம் அனைவருக்குமே தெரியும். கிருத்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் கைநிறைய பணம் எப்பொழுதும் இருப்பதற்கு கூற வேண்டிய ஒரு அற்புதமான மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். – Advertisement -இந்த மந்திரத்தை இன்று இரவு 12 மணிக்குள் கூற வேண்டும். இதற்கு நமக்கு ஒரே ஒரு ஐந்து ரூபாய் நாணயம் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. இந்த மந்திரத்தை யார் வேண்டுமானாலும் கூறலாம். எப்பொழுது வேண்டுமானாலும் கூறலாம். எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதற்கு வழிபாட்டு முறைகள் என்று எதுவும் கிடையாது. பரிகாரம் என்றும் எதுவும் கிடையாது. முழுமனதோடு ஆத்மார்த்தமாக முருகப்பெருமானை நினைத்து முருகப்பெருமானுடைய இந்த ஒரு மந்திரத்தை கூற வேண்டும்.ஒரு அமைதியான இடமாக பார்த்து அமர்ந்து கொள்ளுங்கள். உங்களின் நினைவை சிதறடிக்கும் எந்த ஒரு பொருளும் உங்களிடம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். வலது கையில் ஒரே ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து மூடி உங்களுடைய மடியில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு முருகப்பெருமானை முழுமனதோடு நினைத்துக் கொண்டு முருகப் பெருமானின் இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் 10 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் தங்களால் இயன்ற நேரம் வரை கூறலாம். கூறி முடித்த பிறகு அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து நீங்கள் எந்த இடத்தில் பணத்தை வைப்பீர்களோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும். நாணயத்தை செலவு செய்யக்கூடாது. சிறு குழந்தைகள் முதல் யார் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. – Advertisement – மந்திரம்“ஸ்ரீம் சரவணபவாய நமஹ”இதையும் படிக்கலாமே:நலம் தரும் நந்தி மந்திரம்முருகப்பெருமானின் மந்திரத்தோடு மகாலட்சுமியின் பீஜ மந்திரமும் சேர்ந்த இந்த மந்திரத்தை அமாவாசையோடு சேர்ந்து வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரமான இன்று இரவு 12 மணிக்குள் முழு மனதோடு எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் கூறுபவர்களுக்கு அவர்களுக்கு வரக்கூடிய பணவரவு பல மடங்கு உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
    0
    Your Cart
    Empty CartYour cart is emptyReturn to Shop
    Secure Checkout
    Fast Shipping
    Easy Returns
    I am Online
    I am Online