நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

சகல செல்வமும் பெற்று சிறப்பாக வாழ முருகன் மந்திரம்

சகல செல்வமும் பெற்று சிறப்பாக வாழ முருகன் மந்திரம்



முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு சிறப்பு மிகுந்த நாட்களாக பல இருந்தாலும் அதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்வதுதான் சஷ்டி திதி. இது வளர்பிறை தேய்பிறை என்று மாதத்தில் இரண்டு முறை வரும் என்றாலும், வளர்பிறை சஷ்டிக்கு அதிகமான அளவு பலன்கள் உண்டு என்று கூறப்படுகிறது. நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்களும் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் பெறவேண்டும் என்று நினைப்பவர்களும் வளர்பிறை சஷ்டி தினத்தன்று தான் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். அப்படி வழிபாடு செய்யும்பொழுது கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.சிறப்பாக வாழ முருகன் மந்திரம்ஒவ்வொரு தெய்வத்திற்கும் பல மந்திர உச்சாடல்கள் இருக்கும். அந்த வகையில் முருகப்பெருமானுக்கும் பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. அவரை நினைத்து பலரும் பல பாடல்களை பாடி இருக்கிறார்கள். அப்படி பாடிய பாடல்களை நாம் பாடினாலே முருகனின் அருளை பெற முடியும். இதில் முருகப்பெருமானின் ஒரு சில குறிப்பிட்ட மந்திரங்களை அனுதினமும் உச்சரித்தாலும் சரி அல்லது முருகப்பெருமானுக்குரிய தினங்களில் மட்டும் உச்சரித்தாலும் செல்வ செழிப்புடன் வாழ முடியும். அந்த மந்திரங்களில் ஒரு மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம். – Advertisement -முருகப்பெருமான் நம் உடனையே இருந்து நமக்கு நல்ல வழிகாட்டி, நாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகளை கொடுத்து, சகல விதமான செல்வங்களையும் பெற்று, சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு அருள் புரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப்பெருமானுக்குரிய இந்த மந்திரத்தை தினமும் கூற வேண்டும். தினமும் கூற இயலாது என்பவர்கள் கூட முருகப்பெருமானுக்குரிய சஷ்டி, கிருத்திகை, செவ்வாய்க்கிழமை போன்ற நாட்களில் கூறுவதன் மூலம் முருகப்பெருமானின் அருளை பெற முடியும்.அந்த வகையில் வளர்பிறை சஷ்டியும் மாதத்தின் முதல் நாளும் ஆன ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முருகப்பெருமானின் இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். 27 நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரமாக தான் நம்முடைய நட்சத்திரம் இருக்கும் என்பதால் நமக்கு முருகப்பெருமானின் அருள் கிடைக்க 27 முறை இந்த மந்திரத்தை கூற வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த மந்திரம் அகத்திய பெருமாள் அருளிய மந்திரம் என்றும் இந்த மந்திரத்தை முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் 27 முறை கூறுவது நல்ல பலனை தரும். முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறிவிட்டு அகத்திய பெருமானையும் முழுமனதோடு வழிபாடு செய்ய முருகப்பெருமானின் அருளால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும். நாம் வேண்டிய வரமும் நமக்கு கிடைக்கும். முருகப்பெருமானின் அருள் என்றென்றும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். – Advertisement – மந்திரம்” ஓம் முருகா குரு முருகா அருள் முருகாஆனந்த முருகா சிவசக்தி பாலகனேசண்முகனே சடாச்சரனேஎன் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க.ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸ்வாஹா “இதையும் படிக்கலாமே:கடனை தீர்க்கும் வாராகி மந்திரம்ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் முருகப்பெருமானுக்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறினால் போதும். முருகப்பெருமானின் அருள் நமக்கு என்றென்றும் துணையாக இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online