நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

சனி மகா பிரதோஷம் இரவு சொல்ல வேண்டிய மந்திரம்.

சனி மகா பிரதோஷம் இரவு சொல்ல வேண்டிய மந்திரம்.



இன்றைய தினம் சனி மகா பிரதோஷம். நாள்பட்ட கடனை அடைக்க வேண்டும் என்றால், இன்றைய தினம் கொஞ்சம் சிரமத்தை எதிர்கொள்ளலாம். தவறு ஒன்றும் கிடையாது. இன்று சனிக்கிழமை, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிறைய பேருக்கு ஓய்வு கிடைக்கும். ஆகவே இன்று இரவு கொஞ்சம் நேரம் எடுத்து, தூங்குவதற்கு முன்பு இந்த மந்திரத்தை மட்டும் 1008 முறை உச்சரித்துவிட்டு, தூங்கி பாருங்கள்.நாள்பட்ட கடனை கூட அடைக்க கூடிய பாக்கியம் அடுத்த 4 நாட்களில் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அவ்வளவு சக்தி வாய்ந்த அந்த மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம். – Advertisement -தூங்க செல்வதற்கு முன்பு ஒரு முறை முகம் கை கால்களை கழுவிக் கொள்ளுங்கள். கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி குலதெய்வத்தை ஒருமுறை வணங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு முன்பு ஒரு சின்ன கிண்ணத்தில் விபூதி மட்டும் எடுத்து வைத்து, இந்த மந்திரத்தை 1008 முறை சொல்ல வேண்டும். 1008 முறைக்கு எப்படி கணக்கு வைப்பது.100 என்ற எண்ணிக்கையில் வீட்டில் இருக்கும் கொண்டைக்கடலை, பட்டாணி இது போன்ற பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை மந்திரத்தை சொல்லி முடிக்கும் போதும் ஒரு தானியத்தை எடுத்து மற்றொரு கிண்ணத்தில் போடுங்கள். 100 எண்ணிக்கை முடிக்கும் போது ஒரு பேப்பரில், ஒன்று என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள். – Advertisement – இதுபோல பத்து முறை சொன்னால், ஆயிரம் எண்ணிக்கை கணக்காகிவிடும். பிறகு 8 முறை மந்திரத்தை சுலபமாக சொல்லிவிடலாம். இதுபோக இப்போதெல்லாம் மந்திரம் கவுண்டிங் மெஷின் கடைகளில் விற்கிறது அது உங்க வீட்டில் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த 1008 முறை மந்திரத்தை உச்சரிக்க கட்டாயம் கொஞ்சம் கூடுதல் நேரம் எடுக்க தான் செய்யும். இன்றைய தினம் நந்தி தேவரையும் சிவபெருமானையும் நினைத்து இந்த மந்திரத்தை சொன்னால் நிச்சயமாக எவ்வளவு பெரிய கடன் கஷ்டமாக இருந்தாலும், அது படிப்படியாக குறையும். மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு அந்த விபூதியை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு, தூங்க செல்லலாம். – Advertisement -என்னுடைய கடன் நிச்சயம் அடைந்து விடும் என்ற முழு நம்பிக்கையோடு தூங்க செல்லுங்கள். தினமும் அந்த விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டு, கடனை அடைப்பதற்கு உண்டான முயற்சிகளில் ஈடுபடுங்கள். சரி இன்று இரவு சொல்ல வேண்டிய அது அதிசக்தி வாய்ந்த மந்திரம் என்ன தெரியுமா.நந்தி மந்திரம்ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி போற்றி!இந்த மந்திரத்தைச் சொன்னால் என்ன நடக்கும். நந்தீஸ்வர சித்த சுவாமிகளே உங்களுக்கு உதவி செய்ய ஏதாவது ஒரு மனித ரூபத்தில் வருவார். உங்களுடைய கடன் சுமைகளை தீர்த்து வைப்பார். கடன் பிரச்சனைக்கு மட்டும்தான் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டுமா? வாழ்க்கையில் வேறு ஏதேனும் தீர்க்க முடியாத சிக்கல்கள் இருந்தால், அதை தீர்ப்பதற்கு இந்த மந்திரத்தை உச்சரிக்கலாமா? தாராளமாக சொல்லலாம்.இதையும் படிக்கலாமே: சனி மகா பிரதோஷம் தில்லை நடராஜர் பாடல்.உங்களுடைய வாழ்க்கையில் தீர்க்க முடியாத ஏதேனும் துன்பங்கள் துயரங்கள் இருந்தால், அதிலிருந்து விடுபட இன்று இரவு இந்த மந்திரத்தை சொல்லுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online