– Advertisement –
நம் ஒவ்வொருவரும் தினமும் கஷ்டப்படுவது பணத்தை சம்பாதிப்பதற்கு தான். என்னதான் பணத்தை சம்பாதித்தாலும் நம்முடைய செலவுகளுக்கு அவை பத்தாமல் போகிறது. இப்படி பற்றாக்குறையான சூழ்நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், ஏற்கனவே ஏற்பட்டிருக்க கூடிய பற்றாக்குறையை நீக்கி நிறைவான செல்வத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்களும் குபேர பிரதோஷமான இன்று இரவுக்குள் சிவபெருமானை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நிறைவான செல்வத்தை பெற
சிவபெருமானுக்குரிய நாளாக திகழக்கூடியது தான் பிரதோஷ நாள். பிரதோஷ நாளில் பலரும் விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். அன்றைய பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த நேரத்தில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்ய இயலாத சூழ்நிலையில் இருந்தாலும் சிவபெருமானை மனதார நினைத்து இந்த மந்திரத்தை கூறினாலே முழு பலன் கிடைக்கும்.
– Advertisement –
சிவபெருமானை நினைத்து தவமிருந்து அனைத்து விதமான செல்வங்களையும் பெற்றவர்தான் குபேரர். அப்படிப்பட்ட குபேரருக்குரிய கிழமையான வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய இந்த பிரதோஷ நாளில் சிவபெருமானை நாம் வழிபாடு செய்யும் பொழுது நமக்கும் நிறைவான செல்வம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் விலகும் என்றும் பணத்தை சம்பாதிப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த மந்திரத்தை அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் கூறலாம். பெண்கள் மாதவிடாயாக இருக்கும் பட்சத்திலும் கூறலாம். பிறப்பு தீட்டு, இறப்பு தீட்டு என்று எந்த தீட்டாக இருந்தாலும் அந்த தீட்டு இருக்கும்பொழுது கூட கூறலாம். வீட்டில் இருந்து தான் கூற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. நாம் எங்கே இருக்கிறோமோ அங்கேயே இருந்து கொண்டு கூட இந்த மந்திரத்தை கூறலாம். இந்த மந்திரத்தை கூறும்பொழுது எந்தவித வழிப்பாடும் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் கூறலாம் என்பதால் இதை அனைவருமே உச்சரிக்க முடியும்.
– Advertisement –
மாலை 4:30 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் இந்த மந்திரத்தை கூற வேண்டும். தரையில் அமர்ந்து கூறுபவர்களாக இருக்கும் பட்சத்தில் ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் அமர்ந்து கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தது 15 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் 30 நிமிடம் வரை கூறலாம். நிறுத்தி நிதானத்துடன் சிவபெருமானையும் பார்வதி தேவையும் முழுமனதோடு நம்பி இந்த மந்திரத்தை கூற வேண்டும். அவசர அவசரமாக கூறக்கூடாது. அப்படி கூறுவதன் மூலம் எந்த வித பலனும் கிடைக்காது.
மந்திரம்
“ஓம் ஐஸ்வர்ய லிங்காய நமஹ”
இதையும் படிக்கலாமே:தீராத நோய் தீர்க்கும் சிரஞ்சீவி மந்திரம்
மிகவும் எளிமையான இந்த ஒரு வரி சிவபெருமானின் மந்திரத்தை முழுமனதோடு சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நினைத்து இன்று இரவுக்குள் கூறுபவர்களுக்கு அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு செல்வ வளம் பெருகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam