நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

யோகம் தரும் பிரதோஷ மந்திரம் | yogam tharum pradhosha manthiram in tamil

யோகம் தரும் பிரதோஷ மந்திரம் | yogam tharum pradhosha manthiram in tamil



பிரதோஷம் என்றாலே நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய நாள் என்று நம் அனைவருக்குமே தெரியும். அழித்தல் தொழிலை செய்யக்கூடிய சிவபெருமானை பிரதோஷ நாளில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இதுவரை நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் அழித்து நமக்கு சிறப்பான வாழ்க்கையை அருள்வார். மேலும் கர்ம வினைகள் அனைத்தையும் நீக்கி மீண்டும் பிறவா நிலையை உண்டாக்குவார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிவபெருமானை வளர்பிறை பிரதோஷ நாளில் நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்மை தேடி யோகங்கள் வந்து சேரும். அப்படிப்பட்ட ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.பிரதோஷ மந்திரம் வழிபாடுசிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளான பிரதோஷ நாள் அன்று சிவபெருமானை நாம் பலவிதங்களில் வழிபாடு செய்வோம். விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள், ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள், சிவபெருமானின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். எந்த ஒரு முறையை பின்பற்ற முடியுமோ அந்த முறையை பின்பற்றுவதோடு சிவபெருமானுக்குரிய இந்த மந்திரத்தை முழுமனதோடு கூறுபவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். – Advertisement -இந்த மந்திரத்தை வளர்பிறை பிரதோஷமான ஜூன் மாதம் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதோஷ நேரமான 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் கூறலாம். ஒருவேளை அந்த நேரத்தில் கூற இயலாதவர்கள் மாலை 6:00 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் கூறலாம். 11 முறை மட்டும் இந்த மந்திரத்தை கூறினால் போதும். வீட்டு பூஜை அறையில் சிவபெருமானுக்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்துவிட்டு வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு கையில் சிவபெருமானுக்குரிய வில்வ இலையை வைத்துக்கொண்டு 11 முறை இந்த மந்திரத்தை கூற வேண்டும். பிறகு அந்த வில்வ இலையை சிவபெருமானுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.ஒருவேளை வில்வ இலை கிடைக்கவில்லை என்பவர்கள் விபூதியை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறி மந்திரத்தை கூறி முடித்த பிறகு அதை நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும். மேலும் இந்த மந்திரத்தை கூறும்பொழுது சிவபெருமானுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். எந்த பொருளும் இல்லை என்றாலும் பரவாயில்லை ஒரு டம்ளர் தண்ணீரையாவது சிவபெருமானுக்கு முன்பாக வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை வீட்டில் தான் கூற வேண்டும் என்று இல்லை. பிரதோஷ வழிபாட்டிற்காக ஆலயத்திற்கு செல்பவர்கள் அங்கேயே அமர்ந்து கூட இந்த மந்திரத்தை கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. – Advertisement – மந்திரம்“ஓம் தத்புருஷாய வித்மஹேமஹாதேவாய தீமஹிதன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்”இதையும் படிக்கலாமே: குலதெய்வம் நம்முடன் இருக்கசிவபெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருந்தாலும் இந்த மந்திரத்தை பிரதோஷ நேரத்தில் நாம் முழுமனதோடு சிவபெருமானை நினைத்து கூறும்பொழுது அவரின் அருளால் அனைத்து விதமான யோகங்களையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online