நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

கர்ம வினைகள் நீங்க கூற வேண்டிய மந்திரம்

கர்ம வினைகள் நீங்க கூற வேண்டிய மந்திரம்



சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த தினமாக பிரதோஷ தினம் திகழ்கிறது. பிரதோஷ தினத்தன்று யாரொருவர் சிவபெருமானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் விலகும் என்றும் அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் நம்முடைய கர்ம வினைகள் முற்றிலும் நீங்குவதற்கும் நம்முடைய முன்னோர்களால் ஏற்பட்ட பாவங்களும் தோஷங்களும் விலகுவதற்கு சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளன்று சொல்ல வேண்டிய சிவ மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு பாவமும் கர்ம வினையாக வந்து சேரும். நம்மை மட்டும் இந்த கர்ம வினை பாதிக்காமல் நம்முடைய பிற்கால சந்ததிகளையும் பாதிக்கும். அதோடு மட்டுமல்லாமல் அடுத்த பிறவி என்ற ஒன்று இருக்கும் பட்சத்தில் அதிலும் இந்த கர்ம வினைகள் நம்மை பின்தொடர்ந்து வரும். அப்படிப்பட்ட இந்த கர்ம வினைகளை நீக்குவதற்கு சனி பிரதோஷ நாளன்று சிவபெருமானை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் மட்டுமல்லாமல் நம்முடைய முன்னோர்கள் செய்த பாவத்தினால் வந்த கர்ம வினைகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது. – Advertisement -இந்த மந்திரத்தை நாம் மே மாதம் பத்தாம் தேதி சனிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷ நாளன்று கூறவேண்டும். இரவு படுக்கச் செல்வதற்கு முன் வீட்டு பூஜை அறையில் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து முழு மனதோடு சிவபெருமானை நினைத்துக் கொண்டு பின்வரும் இந்த மந்திரத்தை ஒரே ஒருமுறை மட்டும் கூறினால் போதும். இந்த மந்திரத்தை கூறும் பொழுது சிவபெருமானுக்கு முன்பாக ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரை மட்டும் வைத்து விடுங்கள். அதேபோல் நம்முடைய கையில் சிவபெருமானுக்குரிய விபூதியை வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு விபூதியை நெற்றியில் அணிந்து கொள்ள வேண்டும்,அந்த தண்ணீரை பிரசாதமாக அருந்தி விட வேண்டும். பிறகு எப்பொழுதும் போல் உறங்கச் சென்று விடலாம்.மந்திரம்“ஓம் ஸ்ரீ சோமநாதீஸ்வராய நமஹஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹஓம் ஸ்ரீ ராமேஸ்வராய நமஹஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹஓம் ஸ்ரீம் கேதாரீஸ்வராய நமஹஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹ” – Advertisement – இதையும் படிக்கலாமே:மே மாதம் சிறப்பான மாதமாக அமையசிவபெருமானுக்குரிய சிறப்பு மிகுந்த நாளான சனி பிரதோஷ நாளன்று சிவபெருமானுடைய இந்த மந்திரத்தை ஒருமுறை மட்டும் முழுமனதோடு சிவபெருமானை நினைத்து கூறினால் போதும் நம்முடைய கர்ம வினைகளும் நம்முடைய முன்னோர்கள் செய்த பாவங்களும் முற்றிலும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online