மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, இன்று நிதிநிலை குறித்து மிகுந்த கவனம் தேவை. அநாவசிய செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சேமிப்பைப் பாதுகாத்தல் அவசியம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளும்போது எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுங்கள். அந்நியர்களை நம்புவதைத் தவிர்க்கவும்; அறியாத செயல்களில் ஈடுபட வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகளைத் துவக்க உகந்த நாள். காரியத் தடைகள் நீங்கி, எடுத்த முயற்சிகள் உடனடியாக வெற்றி பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி கிட்டும். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, இன்று உங்கள் பெயரும், புகழும், அந்தஸ்தும் கூடும் தருணம். தேவைக்கேற்ப தனவரவு வசப்படும். பயணங்களால் ஏற்பட்ட உடல் அசதி நீங்கும். தொழில் மற்றும் வணிகத்தில் எதிர்பார்த்ததற்கும் மேலான முன்னேற்றம் உண்டாகும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெளியூர் பயணங்கள் அமையக்கூடும். சுப விரயங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இணைந்து இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். இந்த விடுமுறை நாள் உங்களுக்கு மறக்க முடியாத இனிய அனுபவங்களைத் தரும். மகிழ்ச்சி பன்மடங்கு பெருகும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, இன்று மனதில் குழப்பங்கள் ஏற்படக்கூடும். அநாவசியமான பதற்றம் உருவாகலாம். பணி மற்றும் வணிகத்தில் சுறுசுறுப்பின்மை காணப்படும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. பயணங்களைக் குறைத்துக் கொள்வது நலம். வெளியிடங்களில் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. இத்தினம் சற்று மந்தமான நாளாக அமையக்கூடும்; எனவே, கவனத்துடன் செயல்படுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தனம் தானியம் செழிப்பு மிக்க நாளாக அமையும். எதிர்பாராத வகையில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இல்லத்தரசிகளுக்கு மனமகிழ்ச்சி பன்மடங்கு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இரவு நிம்மதியான உறக்கம் அமையும்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. எதிர்பாராத பரிசுகளையும் பெறுவீர்கள். இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுப காரியத் தடைகள் விலகி, மனதிற்கினிய இல்லற வாழ்க்கை அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை விரிவடையும். ஆனால், அநாவசியமான விஷயங்களைச் சிந்தித்து, அத்தியாவசியமானவற்றைத் தவறவிட்டுவிடுவீர்கள். அநாவசியப் பேச்சுகளையும், எண்ணங்களையும் தவிர்த்து, அன்றாடப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது சிறப்பு. தேவையற்ற நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பது நலம்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே, இன்று கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். பணி மற்றும் வணிகத்தில் அலட்சியம் கூடாது. உங்களது பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருத்தல் நலம். கையில் உள்ள பொருட்களைப் பாதுகாத்தல் அவசியம். இத்தினம் சிறு இழப்புகளால் சிரமங்கள் நேரலாம்; எச்சரிக்கை தேவை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தடங்கல்களும், தடைகளும் உண்டாகக்கூடும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அன்றாடப் பணிகளை மட்டும் செவ்வனே செய்தால் போதுமானது. தேவையற்ற பேச்சுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை நண்பர்களோடு வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, இன்று ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். இறைவழிபாடு செய்வதில் ஆர்வம் மிகுதியாகும். பொதுப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். பணி மற்றும் வியாபாரம் சுமூகமாக அமையும். நிதி நிலைமை சீர்பெறும். மனப்பதற்றம் தணியும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான அளவு ஓய்வு அமையும். விடுமுறை நாள் என்பதால் இத்தினம் இனிய நாளாக விளங்கும். சில சுப விரயங்கள் உண்டாகும். வீட்டில் விருந்தினர்களின் வருகை உண்டு. உறவுகளோடு பேசி மகிழ்ந்து நேரம் செலவிடுவீர்கள். நல்ல உணவு, நிம்மதியான உறக்கம் என்று, இத்தினம் இனிய நாளாக அமையும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


