மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்று நன்மைகள் பல விளையும் நாளாகும். இதுநாள் வரை உங்களுக்குப் புரிபடாத விஷயங்களில் தெளிவு உண்டாகும். உறவுகளுக்கிடையே நிலவிய மனக்கசப்புகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்பட்டு, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியும், நிம்மதியும் நிறைந்திருக்கும். அனாவசியத் தொல்லைகளும், ஐயங்களும் உங்களை விட்டு நீங்கும். பகைவர் தொல்லைகள் அகலும். கடன் சுமை குறையும். உத்தியோகத்திலும், வியாபாரத்திலும் சாதகமான சூழல் உருவாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் பிரிந்து சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இன்று பாராட்டுகள் தேடி வரும் நாள். உத்தியோகத்திலும், வியாபாரத்திலும் நற்பெயரும், முன்னேற்றமும் உண்டாகும். இல்லத்து மங்கையர்க்கு உறவினர்களிடையே நிலவிய மனக்கசப்புகள் மறையும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பயணங்களால் இலாபம் கிட்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெருமைமிக்க நாளாக அமையும். இதுவரை தலைகுனிந்திருந்த நிலை மாறி, உயர்வடைவீர்கள். உங்களது தொழில், வியாபாரம் சிறந்து விளங்கும். உயர் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். நெஞ்சத்திற்கு உகந்தவருடன் இன்பமாக உரையாடும் வாய்ப்பு கிட்டும். நீண்டநாள் மன பாரம் குறையும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இன்று சுகமான வாழ்வு அமையும். சிறந்த உணவு, ஆழ்ந்த உறக்கம், போதிய ஓய்வு என இந்த நாளை இன்புற்று கழிப்பீர்கள். தேவைக்கேற்ப தனவரவு உண்டாகும். கடன் சுமை அகலும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சி தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். மாணவர்கள் உயர் கல்விக்கான முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். நன்மைகள் பல உண்டாகும். செயல்களில் இருந்த தடைகள் நீங்கும். மங்கலச் செலவுகள் கூடும். குடும்பத்தில் சந்தோஷமும், ஒற்றுமையும் நிலவும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இன்று வெற்றி கிட்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெளியூர் பயணங்கள் நன்மை பயக்கும். வங்கிக் கடன் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வியாபார விருத்தி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அமையும். இல்லத்து மங்கையர்க்கு ஆன்மீகச் சிந்தனை மேலோங்கும். நற்பலன்கள் உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று அதிக பணிச்சுமையைத் தவிர்ப்பது நலம். உடல் சோர்வும், அசதியும் ஏற்படக்கூடும். மருத்துவச் செலவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
தனுசு
தனுசு ராசியினருக்கு இன்று வருவாய் பெருகும் நாளாக அமையும். தேவைக்கேற்ப தனவரவு உண்டாகும். இல்லத்து மங்கையர்க்குப் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அடகு வைத்த ஆபரணங்களையும், பத்திரங்களையும் மீட்பதற்கான வழி பிறக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள் இன்று.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று இருமங்கல இலக்குமி கடாட்சம் நிறைந்த நாளாகும். வீட்டில் நின்றுபோன சுபகாரியங்கள் மீண்டும் இனிதே தொடங்கும். மங்கலச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையும் மன அமைதியும் கிட்டும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இன்று நலன் விளையும் நாளாகும். ஆரோக்கியக் குறைபாடுகள் அகலும். உங்களது தேவைக்கேற்ப தனவரவு உண்டாகும். உத்தியோகத்திலும், வியாபாரத்திலும் செயலாற்றல் பெருகும். பகைவரையும் நண்பராக்கும் ஆற்றல் வெளிப்படும். நற்பலன்கள் உண்டாகும்.
மீனம்
மீன ராசியினருக்கு இன்று லாபகரமான நாளாகும். பேச்சாற்றலால் எண்ணற்ற நற்காரியங்களைச் சாதிப்பீர்கள். வசீகரத் தோற்றமும், வாதத்திறமையும் உங்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும். உங்களது திறமை வெளிப்படும். இந்த நாள் உற்சாகம் நிறைந்த நாள். வறியவர்களுக்கு உதவ முன்வாருங்கள். இன்னும் பல நன்மைகள் உண்டாகும்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


