நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 20 மே 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 20 மே 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசியினருக்கு இன்று செல்வ வரவு பெருகும். வசூலாகாத கடன்கள் வசூலாகும். நீதிமன்ற வழக்குகள் தங்களுக்குச் சாதகமாக அமையும். பூர்வீகச் சொத்து சேரும் யோகமுண்டு. நெடுநாளைய பகைகள் தீரும். உத்தியோகத்திலும், தொழிலிலும் சிறப்பான முன்னேற்றம் காணலாம். இயன்றவரை கடும் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். உடல்நலத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இன்று நற்பலன்கள் கைகூடும். இது ஒரு அனுகூலமான நாளாகும். இல்லத்தில் தடைபட்டிருந்த சுப காரியப் பேச்சுகளை மீண்டும் தொடங்கலாம். உத்தியோகத்திலும், வியாபாரத்திலும் சிறப்பான முன்னேற்றம் காணலாம். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தங்கள் திறமையால் தாங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்திற்கு நலன் பயக்கும்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்திலும், தொழிலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு உயர் கல்வியில் நிலவி வந்த தடைகள் நீங்கும். மனதிற்கிசைந்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். சுபச் செலவுகள் உண்டாகும். பகைவர் தொல்லையிலிருந்து விடுபட்டு மன நிம்மதி பெறுவீர்கள்.

கடகம்

கடக ராசியினர் இன்று துணிச்சலுடன் செயல்படுவீர்கள். தங்கள் மனதில் பட்டவற்றை வெளிப்படையாகப் பேசுவீர்கள். தங்கள் சுயமரியாதையை எக்காலத்திலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பீர்கள். ‘இயலாது’ எனில் இயலாதுதான்; ‘இயலும்’ எனில் இயலும் என்பதே தங்களின் நிலைப்பாடாக இருக்கும். இந்நாள் புதிய அனுபவங்களைத் தரும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இன்று மகிழ்ச்சி பொங்கும். பேச்சில் தனித்திறமை வெளிப்படும். உயர் அதிகாரிகளுடன் நிலவிய மனக்கசப்புகள் நீங்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிட்டும். வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவருவீர்கள். நேர்காணலுக்குச் செல்பவர்கள், கலைஞர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் இன்று வெற்றி நிச்சயம்.

கன்னி

கன்னி ராசியினருக்கு இன்று சுறுசுறுப்பு நிறைந்த நாளாகும். பேச்சில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்திலும், வியாபாரத்திலும் நிலவி வந்த தடைகள் விலகும். விவசாயத் தொழில் சிறப்பான முன்னேற்றம் தரும். கடன் சுமை குறையும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்கும் வழி உண்டாகும்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசியினருக்கு இன்று ஆன்மிகச் சிந்தனைகளில் மனம் லயிக்கும். குடும்பத்தினருடன் ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்திலும், வியாபாரத்திலும் சிறு பின்னடைவுகள் ஏற்படலாம். இருப்பினும், பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. தங்கள் பொறுப்புகளை அடுத்தவர்களிடம் ஒப்படைப்பதைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இன்று உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் செயல்படுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். தங்கள் குறிக்கோளை அடைய மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தனுசு

தனுசு ராசியினர் இன்று பேராசை தவிர்ப்பது நலம். தங்கள் கடமைகளிலிருந்து தவறாமல் செயல்பட வேண்டும். பிறர் பேச்சைக் கேட்டு கண்மூடித்தனமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். கூடா நட்பு, பகைவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. தேவையற்ற வாதங்களிலும், சண்டைகளிலும் ஈடுபட வேண்டாம். முன்கோபம் கொள்வதைத் தவிர்க்கவும். இறைவழிபாடு நன்மை பயக்கும்.

மகரம்

மகர ராசியினருக்கு இன்று நல்லதே நடக்கும். தங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். உத்தியோகத்திலும், வியாபாரத்திலும் தங்கள் ஆதிக்கம் மேலோங்கி நிற்கும். கட்டுமானத் தொழில் சிறப்பான லாபம் தரும். தேவைக்கேற்ப பண வரவு இருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இன்று சிறு மனபயமும், பதற்றமும் உண்டாகும். முடிவெடுப்பதில் தடுமாற்றம் நிலவும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நலம். முன்கோபம் கொள்வதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையின் சொற்களுக்கு மதிப்பளிப்பது உத்தமம். எவ்விடத்திலும் பொய் பேசுவதைத் தவிர்க்கவும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க உண்மை மட்டுமே துணை நிற்கும்.

மீனம்

மீன ராசியினர் இன்று தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் குறிக்கோளுடன் செயல்படுவீர்கள். தங்கள் வாழ்வை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். உடல்நலத்தில் சிறு பின்னடைவு ஏற்படலாம்; உடல் சோர்வும் உண்டாகும். போதுமான அளவு நீர் அருந்தி உடல்நலத்தைக் காப்பது அவசியம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online