மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்று கருணை உள்ளம் மேலோங்கும். பிறருக்கு இயன்ற உதவிகளைச் செய்து மனநிறைவு காண்பீர்கள். பகைவர்களையும் நண்பர்களாக்கும் பக்குவம் கைவரப் பெறும். புதிய அனுபவங்கள் கிட்டும் இனிமையான நாள் இது. தொழில், உத்தியோக ரீதியாக சீரிய முன்னேற்றம் தென்படும். மனஅமைதியுடன் கூடிய ஆழ்ந்த உறக்கம் கைகூடும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இன்று இறைவழிபாட்டில் மனம் லயிக்கும். குடும்பப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிட்டி, மனக்குழப்பங்கள் அகலும். தொழில், உத்தியோகத்தில் நிலவிய மன உளைச்சல் குறையும். செயலாற்றல் பெருகும். நிதிநிலை சீராகும். குறிப்பாக, முருகப்பெருமான் வழிபாடு கூடுதல் நற்பலன்களை அருளும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு முன்னேற்றங்கள் நிறைந்ததொரு நாளாக இது அமையும். சுறுசுறுப்பு இருமடங்காகும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கப் பெறும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் நிலவிய தடைகள் அகலும். பிள்ளைகளின் கனவுகளை நனவாக்கப் பெற்றோர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். இனியதொரு நாள் இது.
கடகம்
கடக ராசியினர் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நன்று. எவ்விஷயத்திலும் குரலை உயர்த்த வேண்டாம். அமைதி காப்பதன் மூலம் பாதிப் பிரச்சனைகள் நீங்கும். பிறர் மனதை உணர்ந்து செயல்படுவது சாலச் சிறந்தது. நிதானத்துடன் செயல்பட்டால், இந்நாள் இனிமையாக அமையும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு மனமகிழ்ச்சியுடன் காணப்படும் நாள் இது. கணவன் மனைவிக்குள் நிலவிய மனக்கசப்புகள், சச்சரவுகள் அகன்று இணக்கம் பிறக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். தொழில், உத்தியோகத்தில் பெரிய அளவில் பிரச்சனைகள் எழாது. தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்து முடிக்கவும். அலைபேசி பயன்பாட்டை அளவோடு வைத்திருப்பது நன்மை பயக்கும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது மிகுந்த கவனம் தேவை. தங்கள் பணிகளிலும் முயற்சிகளிலும் சிறு தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனத்துடன் செயல்படுவது அவசியம். தினசரி பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். புதிய நபர்களை முழுமையாக நம்புவதைத் தவிர்க்கவும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு மனநிறைவு தரும் நாளாக இன்று அமையும். தங்கள் தொழில், பணியில் திருப்தி காண்பீர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மை மேலோங்கும். வட்டிப் பிரச்சனைகளும், கடன் தொல்லைகளும் நீங்கும். அடமானம் வைத்த பொருட்களை மீட்க வழி பிறக்கும். சுபகாரியங்களில் நிலவிய தடங்கல்கள் நீங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் தெளிவான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். சவால்கள் நிறைந்த வாழ்வை மேம்படுத்த தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும். நெடுநாள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிட்டும். தங்கள் பேச்சாற்றல் வெளிப்படும் நாள் இது. கலைஞர்கள், மாணவர்கள் போன்றோருக்கு இன்று எதிர்பாராத யோகம் வந்து சேரும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு ஆர்வம் பெருகும். புதிய விஷயங்களை எளிதில் கற்றுக்கொள்வீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்குக் கல்வியில் சீரிய முன்னேற்றம் உண்டாகும். வாகனம் ஓட்டும்போது பொறுமை காப்பது அவசியம்.
மகரம்
மகர ராசியினர் புதிய முயற்சிகளை மேற்கொள்ள ஏற்ற நாள் இது. தொழில், உத்தியோகத்தில் வெற்றி வாகை சூடுவீர்கள். நீண்ட தூரப் பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். வியாபார விரிவாக்கத்திற்குத் தேவையான வங்கிக் கடன் முயற்சிகளை மேற்கொள்ளலாம். நன்மை கிட்டும். அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதையும், நகைகளை அடமானம் வைப்பதையும் தவிர்க்கவும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இன்று மனதளவில் சில குழப்பங்கள் மேலோங்கும். புதிய முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படலாம். நிதிநிலையில் ஏற்ற இறக்கங்கள் உண்டாக வாய்ப்புண்டு. கவனத்துடன் செயல்படுவது அவசியம். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. அனுபவசாலிகளின் அறிவுரைகளைக் கேட்பது நன்மை பயக்கும். அநாவசியமாகப் பிறரை அவதூறு பேசுவதைத் தவிர்க்கவும்.
மீனம்
மீன ராசியினருக்கு இன்று நல்ல பக்குவம் வெளிப்படும் நாள். எத்துணை பெரிய பிரச்சனையாக இருப்பினும், அதற்கான தீர்வை எளிதில் காண்பீர்கள். தொழில், உத்தியோகத்தில் ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படுவீர்கள். யாரிடம் எவ்வாறு உரையாடினால், எச்செயல் எளிதில் கைகூடும் என்பதை சூட்சுமமாக அறிந்து, இந்நாளை சாதுரியமாகக் கடந்து செல்வீர்கள்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


