மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்கள் மனதில் புதிய சிந்தனைகள் மேலோங்கும்; அவற்றைச் செயலாக்குவதில் முனைப்பு காட்டுவீர்கள். கற்பனை வளம் சிறக்கும்; ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட்டு நற்பலன்களைக் காண்பீர்கள். உங்கள் உள்ளார்ந்த திறமைகள் வெளிப்படும் பொன்னாள் இது. பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அநாவசியமான சிக்கல்கள் அகன்று மன அமைதி பிறக்கும். இறை அருளால் முழுமையான ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உடல்நலத்தில் சீரிய முன்னேற்றம் காணப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மங்கலமான நாள். ஆரோக்கியக் குறைகள் நீங்கி உடல் தெம்பு பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பிறருக்கு உதவிக்கரம் நீட்டும் வாய்ப்பு ஏற்படும். மனக்குழப்பங்கள் தெளிந்து தெளிவு பிறக்கும். சந்தேகங்கள் மறைந்து நம்பிக்கை வலுப்பெறும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும்; ஒற்றுமை ஓங்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, வெற்றி உங்கள் கரங்களில் குடிகொள்ளும் நன்னாள் இன்று. பணியிலும், வியாபாரத்திலும் முன்னேற்றப் படிக்கட்டுகளைக் கடந்து செல்வீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் பிரகாசமாக அமையும். உங்கள் கனவுகள் நனவாக, இந்நாளை சீரிய முறையில் பயன்படுத்துங்கள். இறைவனை மனதாரத் துதித்து நன்றி செலுத்துங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று அன்பும், பாசமும், நேசமும் பொங்கும் நாளாகும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். மனதிற்கு உகந்தவர்களுடன் உரையாடி, மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவீர்கள். இனிய கடந்தகால நினைவுகள் உங்கள் உள்ளத்தை மகிழ்விக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுமுகமான சூழல் நிலவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, எதிர்பாராத வகையில் உதவிகள் உங்களைத் தேடி வரும். சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும். அவசியமற்ற கசப்பான சம்பவங்கள் விலகிச் செல்லும். இறைவனின் முழுமையான கருணை பரிபூரணமாகக் கிடைக்கும் நன்னாள் இது. கடன் சுமை குறைந்து நிம்மதி அடைவீர்கள். இரவில் ஆழ்ந்த நிம்மதியான உறக்கம் அமையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று போட்டி மனப்பான்மை மற்றும் பொறாமை கொண்டவர்களின் குறுக்கீடுகளைச் சந்திக்க நேரிடலாம். அமைதியாகவும், நிதானமாகவும் சிந்தித்துச் செயல்படுவது அவசியமாகும். எவருடனும் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிருங்கள். பஞ்சாயத்து போன்ற சிக்கலான சூழல்களைத் தவிர்ப்பது நலம். உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தி, தேவையற்ற சிக்கல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று மன அழுத்தம் சற்று அதிகரிக்கக்கூடிய நாளாக அமையும். முன்கோபத்தைக் கட்டுப்படுத்துவது சிறப்பு. விவாதங்களும், சச்சரவுகளும் உருவாக வாய்ப்புள்ளது. கவனமுடன் சிந்தித்துச் செயல்படுங்கள். ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்தபின் இந்நாளைத் தொடங்குவது நற்பலன் தரும். இறைவழிபாடு செய்வது நிச்சயம் நன்மையை விளைவிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, மறதியால் சில இடர்பாடுகளைச் சந்திக்க நேரிடலாம். முக்கியப் பணிகளை மறந்துவிட்டு, தேவையற்றவற்றில் காலத்தைச் செலவிடுவதைத் தவிருங்கள். உங்கள் கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவது அவசியமாகும். கைப்பேசியில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்த்து கால விரயத்தைத் தடுங்கள். முக்கியப் பணிகளைப் பட்டியலிட்டு, குறித்த நேரத்தில் அவற்றை முடிப்பது உத்தமமான செயலாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று புதிய விஷயங்களில் ஆர்வம் மேலோங்கும். புதிய பணிகளை எளிதாகக் கற்றுத் தேர்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு அருமையான வாய்ப்புகள் கிட்டும். நீண்ட தூரப் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். விவசாயிகளுக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகள் லாபமாக மாறும். நன்மைகள் பல நடக்கும் பொன்னாள் இது.
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று உடல் சோர்வு சற்று உணரப்படலாம். போதுமான ஓய்வை மேற்கொள்வது அவசியமாகும். அதிகப்படியான பணிச்சுமையைத் தவிர்ப்பது நல்லது. நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் தனிக்கவனம் செலுத்துங்கள். முடிந்தவரை நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று மகிழ்ச்சி பொங்கும் நாளாக இது அமையும். இறை வழிபாட்டில் மிகுந்த ஆர்வம் கொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் தொடர்பான உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான வாய்ப்புகள் உருவாகும். முடிந்தவரை அநாவசியச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது சிறந்தது.
மீனம்
மீன ராசி காரர்களே, புகழும், மதிப்பும், அந்தஸ்தும் உயரும் நன்னாள் இது. பணியிலும், வியாபாரத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் கடமைகளைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். தேவைக்கேற்ப பண வரவு சீராக இருக்கும். முடிந்தவரை வீண் விரயச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது உத்தமம்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil


