நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 06 ஜூன் 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 06 ஜூன் 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் நற்பலனைத் தரும். பணி மற்றும் வணிகத்தில் நற்பெயர் ஓங்கும். நீண்ட நாட்களாக உங்கள் மீது விழுந்திருந்த அவதூறுகள் அகலும். ஐயங்கள் தெளிவுபெறும். எதிரி தொல்லைகள் நீங்கி, மன அமைதி பெருகும். தூரப் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல்நலம் சீராகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி நிறைந்த நாளாக அமையும். பணி மற்றும் வணிகத்தில் நிலைத்தன்மை காணப்படும். மனதில் இருந்த மனக் கவலைகள் அகன்று, அமைதி குடிபுகும். நெஞ்சத்திற்கு இனியவருடன் உரையாடி மகிழ்வீர்கள். காதல் கனிந்து, திருமண பந்தம் கைகூடும் வாய்ப்பு உள்ளது. சுபச் செலவினங்கள் உண்டாகும்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களைப் பொறுத்த வரை இன்று நற்பெயர் ஈட்டக்கூடிய நாளாகும். மாணவர்களுக்குக் கல்வியில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும். பணியில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் மீது விழுந்த களங்கங்கள் அகலும். தொழிலில் இழந்த நிலையை மீட்டெடுக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கும். வங்கி கடனுக்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்புடன் செயல்படும் நாளாகும். கடமைகளைத் தவறாமல் நிறைவேற்றுவீர்கள். காலத்தை முறையாகப் பயன்படுத்துவீர்கள். பணி மற்றும் வணிகத்தில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். கடன் சுமை கணிசமாகக் குறையும். வருவாய் சீராகும். தேவையான பணம் கைவசமிருக்கும்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவு கூடும் நாளாக அமையும். போதிய ஓய்வு கிடைக்கும். உடல்நலக் குறைபாடுகள் நீங்கி, ஆரோக்கியம் மேம்படும். மனக் குழப்பங்களுக்குத் தெளிவான தீர்வுகள் கிட்டும். சிக்கலான சிக்கல்களுக்கும் எளிதில் தீர்வு காண்பீர்கள். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். சொத்து சேர்க்கையும் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் நிறைந்த நாளாகும். வழங்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் சிறப்புற முடிப்பீர்கள். வராத கடன்கள் வசூலாகும். நீண்ட காலமாகத் தடைபட்டு வந்த நற்செயல் இன்று கைகூடும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று சிறிது மனக் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். சிக்கலான விஷயங்களில் முடிவெடுக்கத் தடுமாறுவீர்கள். ஆயினும், உரிய நேரத்தில் தேவையான உதவி கிட்டும். குழப்பங்கள் தெளிவுபெறும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களைப் பொருத்தவரை இன்று பணிச்சுமை மிக அதிகமாக இருக்கும். நாள் முழுவதும் உழைப்பிலேயே கழியும். இருபத்து நான்கு மணி நேரமும் போதாத அளவுக்குப் பணிகள் காத்திருக்கும். இருப்பினும், சிரமத்தைப் பாராமல் கடமைகளைச் செவ்வனே முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மேலோங்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி பொங்கும் நாளாக அமையும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். நீண்ட நாள் சிக்கல்களுக்கு நல்ல தீர்வு கிட்டும். பணி மற்றும் வணிகத்தில் உற்சாகம் பெருகும். பணி தேடுபவர்களுக்கு நற்செய்தி உண்டு. பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களைப் பொருத்தவரை இன்று நற்செய்தி வந்து சேரும். இல்லத்தில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சுபச் செலவினங்கள் ஏற்படும். புதிய நட்புகள் மூலம் நல்ல அனுபவங்கள் கிட்டும். பணி மற்றும் வணிகத்தில் நிலைத்தன்மை காணப்படும். தூரப் பயணங்களால் மன அமைதி உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று நிதானத்துடன் செயல்படுவது அவசியம். அதிகப்படியான முன் கோபத்தைத் தவிர்க்கவும். சிந்தித்துச் செயல்படுங்கள். உடன் இருப்பவர்களுடன் பகைமையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். எந்த செயலிலும் அவசரம் கூடாது. மரியாதை கொடுத்துப் பெறுவது நன்மையளிக்கும். பேச்சில் மிகுந்த கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று சிறுசிறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். உடன் இருப்பவர்களால் சில தொல்லைகள் ஏற்படலாம். உங்கள் கடமைகளைச் செவ்வனே செய்யத் தடங்கல் உண்டாகலாம். சிறு அவதூறுகளுக்கு ஆளாக நேரிடலாம். எந்த சூழலிலும் பொய் கூறுவதைத் தவிர்க்கவும். மற்றவர்களைப் பற்றி அவதூறு பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. நேர்மையைக் கடைப்பிடித்தால் நன்மைகள் உண்டாகும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online