மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு வளர்ச்சி மிகுந்த நாளாக அமையும். தொடங்கப்படும் புதிய காரியங்கள் யாவும் வெற்றியைத் தேடித்தரும். நெடுநாளைய உங்கள் ஆசைகள் கைகூடும். தெய்வ நம்பிக்கை மேலோங்கும். குடும்பத்தில் அமைதியும் சுபிட்சமும் நிலவும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் சிறப்பான நாள் இன்று.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்றைய தினம் நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் தனித்திறமைகள் வெளிப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கான உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட தூரப் பயணங்களால் நன்மைகளை அடைவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, இன்று நீங்கள் ஆற்றலுடன் செயலாற்றுவீர்கள். ஆக்கபூர்வமான பல நல்ல காரியங்களை மேற்கொள்வீர்கள். தேவைக்கேற்ப பணவரவு தாராளமாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். பிறருக்கு உதவும் மனப்பான்மை அதிகரிக்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு மேற்கொள்வதுடன், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்களுக்கு சுபிட்சமான நாளாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் கடமைகளில் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் நல்லாதரவைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியில் முடியும். உறவுகளோடு இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். மகிழ்ச்சி பன்மடங்கு பெருகும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு சற்றே முன்கோபம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும். இறைவழிபாட்டின் மூலம் மனதை அமைதியாக வைத்துக்கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பொறுமை மிக அவசியம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று போதுமான ஓய்வை எடுத்துக்கொள்வது நல்லது. நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். அதிகப்படியான வேலைப்பளு இருந்தால், அவற்றை நாளைக்கு ஒத்திவைப்பது நன்று. அசதியால் ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. போதுமான அளவு நீர் அருந்தி, ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு போராடும் மனப்பக்குவம் தேவைப்படும். சில எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம். உங்கள் முயற்சிகளுக்கு உடனடி வெற்றி கிடைக்காது. பொறுமையுடன் செயல்பட வேண்டும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களையும் முடிந்தவரை குறைத்துக் கொள்வது உத்தமம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மனோதைரியம் மிகவும் அவசியம். எழும் பிரச்சனைகளைக் கண்டும், துயரங்களைக் கண்டும் துவண்டுவிடக் கூடாது. அவற்றை எதிர்த்துப் போராடும் மனப்பக்குவம் இருந்தால், இந்த நாளை எளிதில் சமாளித்து விடலாம். குறிப்பாக பெண்கள் தன்னம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் செயல்பட வேண்டும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே, இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பிரிந்து வாழும் கணவன் மனைவிக்குள் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் நல்லுறவு மேலோங்கும். சுபச் செலவுகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று நீங்கள் இரக்க குணத்துடன் நடந்து கொள்வீர்கள். எதிரிகளுக்கும் ஒரு வாய்ப்பு அளித்து, அவர்களை மன்னிக்கும் மனப்பான்மை உருவாகும். நெடுநாளைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான போக்கே நிலவும்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு குழப்பமான மனநிலை ஏற்படக்கூடும். எந்த முடிவை எடுப்பது, எந்த முடிவை எடுக்கக்கூடாது என்பதில் சிறு தடுமாற்றம் உண்டாகும். முடிந்தவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். அளவாகப் பேசுங்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று நீங்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். இறைசக்தி உங்களுக்குச் சிறு சிறு சோதனைகளை அளிக்கக்கூடும். அவற்றில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டுமானால் நேர்மையுடன் செயல்பட வேண்டும். பொய் பேசுவதைத் தவிர்க்கவும். சோதனைகளை நேர்மையோடு கடந்து சென்றால், இன்று சாதனைகளைப் படைக்கலாம்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam
Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil
எழுதியவர்: Ganesh Gandhi
எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்:


