மொறு மொறு முறுக்கு செய்முறை | moru moru murukku seimurai in tamil

மொறு மொறு முறுக்கு செய்முறை | moru moru murukku seimurai in tamil

Qries

– Advertisement –

நம்முடைய தமிழ்நாட்டில் தின்பண்டங்களில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கக்கூடியது முறுக்கு. பொதுவாக இந்த முறுக்கை தீபாவளி சமயங்களில் அனைத்து இல்லங்களிலும் செய்வார்கள். இதற்கென்று ஒரு வழிமுறையை பின்பற்றுவார்கள். உளுந்து அரிசி போன்றவற்றை வாங்கி அதை சுத்தம் செய்து சில பேர் அதை வறுத்து ரைஸ் மில்லில் கொடுத்து அரைப்பார்கள். சில பேர் வெயிலில் நன்றாக காய வைத்து ரைஸ்மிலில் கொடுத்த அரைப்பார்கள்.
பிறகு அந்த மாவை பதப்படுத்தி தங்களுக்கு வேணும் என்னும் சமயத்தில் அதை முறுக்காக புழிந்து தயார் செய்வார்கள். இதில் உளுந்து வருப்படும் நிலையை பொறுத்து முறுக்கின் தன்மையும் மாறுபடும் என்று கூறப்படுகிறது. இப்படி பக்குவம் தெரியாமல் ஏனோ தானோ என்று செய்ய நினைத்தால் முறுக்கு நன்றாக வராது. ஆனால் எந்தவித பக்குவம் இல்லாமல் மிகவும் சுலபமான முறையில் வீட்டில் யார் வேண்டுமானாலும் செய்யும் அளவிற்கு எளிமையான முறையில் முறுக்கு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள் உளுந்து – ஒரு டம்ளர்அரிசி மாவு – 4 1/2 டம்ளர்எள் – ஒரு ஸ்பூன்சீரகம் – ஒரு ஸ்பூன்பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன்உப்பு – தேவையான அளவுவெண்ணெய் – 4 ஸ்பூன்எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை முதலில் ஒரு டம்ளர் உளுந்த எடுத்துக் கொள்ளுங்கள். அதை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். கழுவிய இந்த உளுந்தை குக்கரில் போட்டு நாலு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் விட்டு இறக்க வேண்டும். உளுந்து சூடு ஆறியதும் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து வெண்ணெய் பதத்திற்கு நன்றாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

அரைத்த இந்த உளுந்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் எந்த டம்ளரில் உளுந்து அளந்தோமோ, அதே டம்ளரில் இடியாப்ப மாவு நாலரை டம்ளர் சேர்க்க வேண்டும். வீட்டில் பச்சரிசி மாவு இருந்தால் அதைக்கூட சேர்த்துக் கொள்ளலாம். பிறகு இதில் எள்ளு, சீரகம், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, வெண்ணெய் இவற்றை சேர்த்து முதலில் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இவை அனைத்தும் நன்றாக கலந்த பிறகு தேவைக்கேற்ப தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ள வேண்டும். பிறகு முறுக்கு அச்சில் இந்த மாவை உருட்டி போட்டு வாழை இலை அல்லது தட்டில் எண்ணெயை தடவி அதில் முருக்கு மாவை பிழிய வேண்டும்.
– Advertisement –

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் முறுக்கு பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சிறிதளவு மட்டும் மாவை அதில் போடுங்கள். அந்த மாவு அடியில் சென்று மேலே எழும்பி வந்ததும் அடுப்பை குறைந்த தீயில் வைத்துவிட்டு நாம் புழிந்து வைத்திருக்கும் முறுக்கை எண்ணெயில் போட்டு ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு மறுபுறம் திரும்பி போட்டு நன்றாக சிவந்த பிறகு எண்ணெயிலிருந்து எடுத்து விட வேண்டும் மிகவும் சுவையான மொறு மொறு முறுக்கு தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:
இந்த முறையில் செய்தால் பெரிதும் சிரமப்படாமல் நாம் நினைக்கும் பொழுது முறுக்கு செய்து சாப்பிட்டு விடலாம். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top