– Advertisement –
நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் இருக்கிறது. நம்முடைய உடலுக்கு அதிகளவு தேவைப்படக்கூடிய சத்துக்களை நாம் ஏதாவது ஒரு ரூபத்தில் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நாம் சேர்த்துக் கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான ஒரு சத்தாக திகழ்வதுதான் புரோட்டின் சத்து. புரோட்டின் சத்து நமக்கு கிடைப்பதற்கு நாம் அதிக அளவில் பச்சை பயறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பச்சைப் பயறை அப்படியே வேக வைத்து சுண்டலாக சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் அதை முளைகட்டியும் சாப்பிடலாம். ஆனால் இந்த முறையில் செய்து தரும்பொழுது வீட்டில் இருக்கும் குழந்தைகள் அதை சாப்பிட மறுப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் சாப்பிடுவதற்காகவே பச்சை பயறை வைத்து மிகவும் எளிமையான முறையில் தோசை செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்
பச்சை பயறு – ஒரு கப்புஇட்லி அரிசி – 1/4 கப்புவெந்தயம் – 1/2 டீஸ்பூன்பச்சை மிளகாய் – 7இஞ்சி – ஒரு இன்ச்சீரகம் – ஒரு டீஸ்பூன்கொத்தமல்லித்தழை – சிறிதளவுஉப்பு – தேவையான அளவு
செய்முறை
பச்சைப் பயறு, இட்லி அரிசி மற்றும் வெந்தயத்தை ஒன்றாக சேர்த்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி கழுவிய பிறகு சுத்தமான தண்ணீரை ஊற்றி ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஆறு மணி நேரம் கழித்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை இவற்றுடன் ஊற வைத்திருக்கும் பச்சை பயிரையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
– Advertisement –
தோசை மாவு தயாரானதும் அதில் தேவையான அளவு உப்பை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசை கல் சூடானதும் இந்த பச்சை பயறு மாவை எடுத்து தோசையாக ஊற்ற வேண்டும். மிகவும் மெல்லியதாகவும் ஊற்றக் கூடாது கனமானதாகவும் ஊற்றக் கூடாது.
தோசையை சுற்றி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி மூடி போட்டு மூடி வைத்து வேக விட வேண்டும். அவ்வளவு தான் ஆரோக்கியமான பச்சை பயறு தோசை தயாராகி விட்டது. இந்த தோசைக்கு தொட்டுக் கொள்வதற்கு காரசாரமாக காரச் சட்னி, இஞ்சி சட்னி போன்றவற்றை வைக்கலாம்.
இதையும் படிக்கலாமே: தேங்காய் ரவா லட்டு செய்முறை
எப்பொழுதும் அரிசி உளுந்து சேர்த்து இட்லி, தோசை செய்வதற்கு பதிலாக இந்த முறையில் புரோட்டின் நிறைந்த பச்சை பயறை சேர்த்து செய்வதன் மூலம் ஆரோக்கியமும் கிடைத்துவிடும், அதே சமயம் டிபனும் ரெடி ஆகிவிடும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam