ஆவணி மூலம்
செந்தமிழ் வழங்கும் பாண்டிய நாட்டிலே அரசாண்ட ஹரிமர்தன பாண்டியனின் முதல் மந்திரியான திருவாதவூரான் பிறவி துன்பத்தை போக்க வேண்டும் என்று உலக பற்றை வெறுத்து சிவபற்றை விரும்பி சிவபெருமானை வழிபடலானார்.
மாணிக்கவாசகருக்கு திருவருள்
ஒரு சுபதினத்தில் மன்னன் 49 கோடி பொன் கொடுத்து சோழ நாட்டிலே குதிரைகள் வாங்கி வருமாறு அனுப்பினான். திருஉள்ளம். கொண்ட பரமசிவன் பரமாச்சாரியார் திருமேனிக் கொண்டு திருவாதவூருக்கு நான்மறை அறங்களோங்க மேன்மை கொள் சைவ நீதி, விபூதி பஞ்சாக்கரம் மேலும் மேலும் விளங்க வேதமாகிய வெண் பரியின் மேல் குதிரை வர்த்தகராகத் திருக்கோலம் கொண்டு சோமகந்தாப் பெருமானார் மதுரைக் ஏழுந்தருளிய தினம் ஆவணி மூலம் ஆலவாயரசன் மாணிக்க வாசகர் பொருட்டாக நரியைக் (குதிரை) பரியாக்கித் திருவருள் பாலித்த புனித நாள் எம்பெருமான் குதிரைச் சேவகராகி எழுந்தருளி மாணிக்கவாசகருக்கும், பாண்டியனுக்கும் மதுரையில் திருவிளையாடல் புரிந்த தினம் ஆவணிமூலம். இறைவனே எழுந்தருளி அருள்புரிந்து திருவிளையாடல் நிகழ்த்திய இந்தினத்தில், இறைவனை வணங்கி அவனருள் பெறுவோமாக.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam