– Advertisement –
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் இருந்தாலும் அதை இயற்கையான முறையில் மேம்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலரே, அப்படிப்பட்டவர்கள் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வார்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பதிவில் ஆவாரம் பூவை வைத்து சட்னி செய்யும் முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
அதிகமான அளவு துவர்ப்பு சுவை கொண்ட அனைத்து பொருட்களும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உறுதுணையாக திகழக்கூடியவை. அதிலும் குறிப்பாக ஆவாரம் பூ சிறந்த பங்கு வகிக்கிறது. “ஆவாரைக் கண்டார் சாவார் உண்டோ” என்று பழமொழி இருக்கிறது. ஆவாரம் பூவை பல வகைகளில் நாம் உள்ளுக்குள் எடுக்கலாம். அதில் ஒரு வகையாக தான் ஆவாரம் பூவை வைத்து சட்னி செய்யும் முறையை பார்க்க போகிறோம்.
– Advertisement –
தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ – ஒரு கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு
தக்காளி – 2
இந்து உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஆவாரம் பூ, சின்ன வெங்காயம், தக்காளி இவை அனைத்தையும் நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஆவாரம் பூவில் இருக்கும் இதழ்களை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். முழுமையாக பூக்களை உபயோகப்படுத்தினால் துவர்ப்பு சுவை மிகவும் அதிகமாக இருக்கும். இப்பொழுது இவை மூன்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் ஆவாரம் பூ சட்னி தயாராகி விட்டது. இதை இட்லி, தோசை, சப்பாத்தி என்று அனைத்திற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
ஆவாரம் பூ சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது. ஆவாரம் பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொண்டு வர சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். மேலும் இந்த ஆவாரம் பொடியை பயன்படுத்தி குடிநீர் தயார் செய்தும் குடிக்கலாம். மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்குரிய செல்களை அழிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
– Advertisement –
உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை குறித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது ஒரு சிறந்த மலமிலக்கியாக செயல்படுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் சிறுநீரகத்தை பாதுகாக்க கூடிய ஒரு அற்புதமான மருந்தாக திகழ்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவாரம் பூவை உண்ணும் பொழுது காய்ச்சலின் தீவிரம் குறையும். ஆறாத புண்களையும் ஆற வைக்கும் அற்புதமான தன்மை வாய்ந்தது.
மேலும் இந்த ஆவாரம் பூவை தலைக்கு உபயோகப்படுத்துவதன் மூலம் பொடுகு தொல்லை நீங்கும். இளநரை மறையும். முடி வளர்ச்சியை தூண்டும். இதை முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது சரும நிறம் அதிகரிக்கும். முகத்தில் இருக்கக்கூடிய தழும்புகள் அனைத்தையும் நீக்க உதவும்.
இதையும் படிக்கலாமே: கேரட் பீன்ஸ் சட்னி.
இவ்வளவு அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த ஆவாரம் பூவை நாமும் நம் உணவில் எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam